'சோத்துல எலி மருந்த கலந்து கொடுத்திட்டு போனாங்க...' '26 ஆண்டுகள் கழித்து வீடு திரும்பியுள்ள தாய்...' நெகிழ்ச்சி சம்பவம்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

26 ஆண்டுகளுக்கு பிறகு மன நலம் பாதிக்கப்பட்ட தாய் வீடு திரும்பிய போது, 4 பிள்ளைகளும் தாயை ஆசையோடு அரவணைத்த நெகிழ்ச்சியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சின்னஞ்சையா (64). இவரது மனைவி நீலம்மாள் (60) தெலங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டம் இம்முல் நர்வா கிராமத்தை சேர்ந்தவர்கள்.  இவர்களுக்கு கவிதா என்ற மகளும் ராஜேஷ்கண்ணா, மையூரி, சந்தோஷ்குமார் என்ற 3 மகன்கள் உள்ளனர்.  26 ஆண்டுகளுக்கு முன்பு நீலமாளுக்கு மனநலம் பாதிப்பு ஏற்பட்டிருந்ததாலும் குழந்தைகள் வீட்டிலேயே தாயை பராமரித்து வந்துள்ளனர்.

மனநலம் பாதிக்கப்பட்ட நீலம்மாள் ஒரு நாள் தன்னுடைய  4 பிள்ளைகளுக்கு உணவில் எலி மருந்து கொடுத்து விட்டு வீட்டை வீட்டு வெளியேறியுள்ளார். குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்படவே உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று குழந்தைகளை காப்பாற்றி உள்ளனர்.

அதை அடுத்து காணாமல் போன  நீலம்மாவை பற்றி போலீசுக்கு தகவல் அளித்து தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். ஆனால் எங்கே தேடியும் நீலம்மாவை கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் நீலம்மாவின் கணவர்  2007-ம் ஆண்டு சின்னஞ்சையா இறந்துவிட்டார்.

இந்நிலையில் சென்னை பனையூரில் சாலையோரம் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றி திரிந்துக் கொண்டிருந்த நீலம்மாளை தனியார் மனநல காப்பக ஊழியர்கள் மீட்டு அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர். பின்னர் சம்பவம் குறித்து மாநில குற்ற ஆவண காப்பக இன்ஸ்பெக்டர் தாஹிராவுக்கு தனியார் மனநல காப்பக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

தகவல் அறிந்த இன்ஸ்பெக்டர் தனியார் காப்பத்திற்கு சென்று நீலம்மாளிடம் விசாரணை நடத்தினார். அப்போது தன் நினைவில் இருந்தவற்றை போலீசாருக்கு கூறியதை அடுத்து சென்னை போலீசார்,  ஷாம் நகர் காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு விசாரித்துள்ளனர்.

அப்போது ஐபிஎஸ் பயிற்சியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் உதவியுடன் நீலம்மாளின் குடும்பத்தாரை கண்டுபிடித்து தகவல் அளிக்கப்பட்டது. அதை அடுத்து நீலம்மாளின் 4 பிள்ளைகளும் 16.03.2020 சென்னை வந்துள்ளனர். குற்ற ஆவண காப்பக இன்ஸ்பெக்டர் தாஹிரா 4 பிள்ளைகளுடன் நீலம்மாளை நேற்று சேர்த்து வைத்துள்ளார்.

26 ஆண்டுகளுக்கு பிறகு, தாய் நீலம்மாளை சந்தித்த பிள்ளைகள் மன மகிழ்ச்சியோடு தாயை அரவணைத்தனர். இந்த சம்பவம் அங்கிருக்கும் அனைவரையும் நெகிழ செய்துள்ளது.

MOTHER, CHILDRENS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்