'இந்தியா' ஒரு சொர்க்கம்...! 'என் கண்ணு முன்னாடி நான் வாழ்ந்த வீட்ட கொளுத்தினாங்க...' 'நியூஸ்'ல காட்டுறதெல்லாம் ஒண்ணுமே இல்ல...! - இந்தியா வந்த 'ஆப்கான்' பெண் வேதனை...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தாலிபான்கள் உலகத்திற்கு ஒன்று சொல்லிவிட்டு, நாட்டுக்குள் முன்பு போல் பழமைவாதியாக கொடுமையான காரியங்களை செய்வதாக ஆப்கானில் இருந்து வந்த மக்கள் கண்ணீர் வடிக்கின்றனர்.

20 ஆண்டுகளுக்கு பின் இஸ்லாம் அடிப்படை மற்றும் தீவிரவாத அமைப்பான தாலிபான் ஆப்கானை முழுவதுமாக கைப்பற்றியது. இம்முறை நாங்கள் முன்பு போல் பழமைவாதியாக இல்லை, பெண்களை கொடுமை செய்ய மட்டோம், இனி எங்கள் ஆட்சியில் மக்கள் சுதந்திரமாக இருக்கலாம் என செய்தியாளர் சந்திப்பெல்லாம் வைத்து கூறினர்.

ஒரு சில ஆப்கான் மக்கள் தாலிபானின் இந்த அறிவிப்பை கேட்டு சிறிது மகிழ்ச்சி அடைவதற்கு முன்பே, அங்கு நிலை மோசமாக இருப்பதாக பல செய்திகள் வெளியாகின.

ஆப்கானில் இருக்கும் இந்தியர்களை மீட்கும் பணிகளும் தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்திய விமானப்படையின் சி-17 விமானம் நேற்று முன்தினம் இரவு ஆப்கானை அடைந்துள்ளது.

ஆனால் விமானத்தில் ஏற வந்த 150 இந்தியர்களை தாலிபான்கள் சுற்றி வளைத்து, பின்னர் அவர்கள் காவல்நிலையம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அதன்பின்னர் இந்தியா பேச்சுவார்த்தை நடத்திய பிறகே மக்கள் விமானத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதோடு, அந்த விமானத்தில் 107 இந்தியர்கள் மற்றும் இந்தியர்கள் அல்லாமல் ஆப்கானைச் சேர்ந்த இந்துக்களும், சீக்கியர்களும் உள்பட 168 பேரை ஏற்றிக்கொண்டு இந்திய விமானப்படையின் சி-17 விமானம் நேற்று காபூலில் இருந்து இந்தியா வந்தது.

ஆப்கானில் இருந்து இந்தியாவிற்கு அகதிகளாக வந்த மக்கள் கூறும் சம்பவம் தாலிபான் இன்னும் திருந்தவே இல்லை என்பதற்கு சான்றாக தான் உள்ளது.

விமான நிலையத்தில் சதியா என்ற பெண்மணி செய்தியாளர்களிடம் இதுகுறித்து கூறும்போது, 'ஆப்கானிஸ்தானில் இப்போது நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. தொலைக்காட்சியிலும், செய்திகளிலும் கூறுபடுவது கொஞ்சம் தான்.

நான் என் மகள் மற்றும் இரண்டு பேரக்குழந்தைகளுடன் இங்கு வந்துள்ளேன். எங்கள் இந்திய சகோதர சகோதரிகள் எங்களை மீட்டுள்ளனர். தாலிபான்கள் என் வீட்டை எரித்தனர். பெண்கள் ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பாக இல்லை. எங்களுக்கு உதவிய இந்தியாவுக்கு நன்றி. இந்தியா உண்மையில் சொர்க்கபுரி தான்' எனக் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்