'சார், அந்த பார்சல் From அட்ரஸ் செக் பண்ணுங்க'... 'ஆப்கானிஸ்தான்னு போட்டு இருக்கு'... 'பதறிய அதிகாரிகள்'... சாக்குப்பைக்குள் காத்திருந்த மெகா சம்பவம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இருவரைக் கைது செய்துள்ள வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குஜராத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்தில் வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளை ஒரு பார்சல் கலக்கமடையச் செய்தது. முந்த்ரா துறைமுகத்தில் ஆப்கானிஸ்தானிலிருந்து வந்திருக்கும் பார்சலில் மர்மப் பொருள் இருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பார்சலை திறந்த அதிகாரிகளுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

ஒரு கன்டெய்னரில் 2 டன் ஹெராயின் போதைப் பொருளும், மற்றொரு கன்டெய்னரில் ஆயிரம் கிலோவும் இருந்தது. ஆனால் இதற்கு மேல் அதிர்ச்சி என்னவென்றால் இந்த இரு கன்டெய்னர்களும் ஆப்கானிஸ்தானிலிருந்து ஏற்றப்பட்டுள்ளன என்பது தான்.

குஜராத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்தில் கடந்த சில ஆண்டுகளில் பிடிபட்ட போதைப் பொருட்களில் அதிக மதிப்பு வாய்ந்தவை தற்போது பிடிபட்ட ஹெராயின் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதற்கிடையே இந்தப் போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக அகமதாபாத், டெல்லி, சென்னை, காந்திதாம், மாண்டவி உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

இந்த இரு கன்டெய்னர்களிலும் உள்ள ஹெராயின் போதைப் பொருளின் சர்வதேசச் சந்தை மதிப்பு ரூ.19,900 கோடி இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த கடத்தலில் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் யாருக்கேனும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளார்கள்.

உலக அளவில் ஹெராயின் உற்பத்தி செய்வதில் ஆப்கானிஸ்தான் முதலிடத்தில் உள்ளது. இங்கிருந்து தான் 80 முதல் 90 சதவீத ஹெராயின் உற்பத்தி நடக்கிறது. தற்போது ஆப்கானிஸ்தான் தாலிபான்களின் கட்டுப்பாட்டில் வந்துள்ளதால் ஹெராயின் உற்பத்தி இன்னும் அதிகரித்துள்ளதாகச் சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்