“இனி இந்த மாதிரி விளம்பரங்களை ஒளிபரப்ப கூடாது”..! மத்திய அரசு போட்ட பரபரப்பு உத்தரவு!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களுக்கு எதிராக மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Advertising
>
Advertising

Also Read | ஒரு போட்டிக்கு 100 கோடி?… ஒட்டுமொத்தமாக 43,050 கோடி?… வியக்கவைக்கும் ஐபிஎல் ஒளிபரப்பு உரிமம்

ஆன்லைன் சூதாட்டங்கள் குறித்த தொடர்ச்சியான எதிர் கருத்துக்களும் வாதங்களும் வந்தவண்ணம் இருந்தன. மேலும் ஆன்லைன் சூதாட்டங்கள் பலரது வாழ்க்கையில் உளவியல் ரீதியான பிரச்சினையை உருவாக்குவதாகவும், இதனால் சமூக சிக்கல்களையும் நிதி பிரச்சினைகளையும் சாதாரண மனிதர்கள் எதிர் கொள்கின்றனர் என்றும் தொடர்ச்சியான புகார்கள் வந்தவண்ணம் இருந்தன.

இது போன்ற விளையாட்டுகளுக்கு பலர் அடிமையாக செய்ததுடன், மேலும் பலர் எதிர்மறை முடிவுகளுக்கும் எண்ணங்களுக்கும் செல்வதை தொடர்ச்சியாக செய்திகளில் காணமுடிந்தது. இந்த நிலையில்தான் ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான விளம்பரங்களை ஒளிபரப்புவதற்கு எதிராக மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் தற்போது புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.

அதன்படி, தொடர்ச்சியாக ஆன்லைன் சூதாட்டங்களில் விளைவால் ஏற்படும் பண இழப்பு மற்றும் உயிர் இழப்பு சம்பவங்களுக்கு எதிராக எழுந்த புகார்கள் மற்றும் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்வதற்கான கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கும் வகையில் இந்த அறிக்கை அமைந்துள்ளதாக பலரும் குறிப்பிடுகின்றனர்.

ஆம், இந்தியாவில் ஆன்லைன் சூதாட்டங்களை விளம்பரப்படுத்தும் விளம்பரங்களை வெளியிட ஒளிபரப்ப கூடாது என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் கேட்டுக் கொண்டிருக்கிறது. இதுதொடர்பாக வெளியிடப் பட்டுள்ள அறிக்கையில், “பத்திரிக்கைகள் மற்றும் புத்தகங்கள் பதிவு சட்டம் 1860 இன் கீழ் பதிவு செய்யப்பட்ட செய்தி தாள்கள், தனியார் சாட்டிலைட் சேனல்கள், டிஜிட்டல் மீடியா செய்தி மற்றும் நடப்பு விவகார விஷயங்களை வெளியிடும் ஊடகங்களுக்கு ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்கள் பற்றிய ஆலோசனையாக இந்த அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்திய விளம்பர தரநிலை கவுன்சிலின் வழிகாட்டுதலின்படி சாட்டிலைட் சேனல்கள், மின்னணு மற்றும் சமூக ஆன்லைன் ஊடகங்களில் ஆன்லைன் பந்தய இணையதளங்கள் மற்றும் ஆன்லைன் சூதாட்ட தளங்களில் தொடர்பான விளம்பரங்கள் வெளிவருவது அமைச்சகத்தின் கவனத்துக்கு தற்போது வந்திருக்கிறது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நடக்கும் இந்த மாதிரியான பந்தயங்கள் மற்றும் சூதாட்டங்கள் சட்டவிரோதமானது. இவை தொடர்பான விளம்பரங்கள் தடை செய்யப்பட்ட ஒரு செயலை ஊக்குவிப்பதாகவும், நுகர்வோர் குறிப்பாக இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கு குறிப்பிடத்தக்க நிதி மற்றும் சமூக பொருளாதார ஆபத்தை ஏற்படுத்தும் விதமாகவும் உள்ளதாக கவலைகள் எழுந்துள்ளன.

எனவே பிரஸ் கவுன்சில் சட்டம் 1978-இன் கீழ், இந்திய பிரஸ் கவுன்சில் தகவல் தொழில்நுட்பம் விதிகள் 2020-ல் குறிப்பிட்டுள்ளபடி மக்கள் மற்றும் பொது நலன்களை கருத்தில் கொண்டு அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள் ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களை வெளியிடுவதை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. ஆன்லைன் விளம்பர இடை தரகர்கள் மற்றும் வெளியீட்டாளர்கள் உட்பட ஆன்லைன் மற்றும் சமூக ஊடகங்கள் இந்தியாவில் இப்படியான விளம்பரங்களை காட்டவும், இந்த விளம்பரங்களை வைத்து இந்திய மக்களை குறி வைக்கவும் கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

 

Also Read | ஆழ்துளையில் 10 வயது சிறுவன்.. வாளியில் நீரை நிரப்பி அனுப்பும் ஆச்சர்யம்!.. 55 மணி நேர போராட்டம்..!

 

I&B MINISTRY, ONLINE BETTING PLATFORM ADS, ONLINE BETTING ADS

மற்ற செய்திகள்