‘ஆரம்பத்தில் இருந்தே பின்னடைவு’.. விரக்தியில் தனியாக வெளியேறிய வேட்பாளர்!
முகப்பு > செய்திகள் > இந்தியாதிருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் வாக்கு எண்ணிக்கையில் பின்னடைவை சந்தித்தால் வாக்கு எண்ணும் மையத்திலிருந்து பாதியிலேயே வெளியேறினார்.
மக்களவை மற்றும் தமிழகத்தில் நடைபெற்ற இடைதேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த வாக்கு எண்ணிக்கையில் பாஜக 300 தொகுதிகளுக்கும் மேல் முன்னிலை வகித்து வருகிறது. ஆனால் பாஜக கூட்டணியில் உள்ள அதிமுக தமிழகத்தில் பின்னடைவை சந்தித்து வருகிறது.
இதில், நெல்லை மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் பால் மனோஜ்பாண்டியன், திமுக சார்பில் ஞானதிரவியம் மற்றும் இதர கட்சிகள் சார்பாக வேட்பாளர்கள் களமிறங்கினர். வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து திமுக வேட்பாளர் ஞானதிரவியம் முன்னிலை வகித்து வந்தார். ஒவ்வோரு சுற்றின் முடிவிலும் திமுக வேட்பாளர் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வந்தார்.
இதனை அடுத்து 10 -வது சுற்றின் முடிவில் திமுக வேட்பாளர் ஞானதிரவியம் 2,41,998 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் பால் மனோஜ்பாண்டியன் 1,52,828 வாக்குகளும் பெற்றிருந்தனர். இதில் பால் மனோஜ்பாண்டியன் 89,170 வாக்குகளில் பின்னடைவை சந்தித்தார். இதனால் வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து வெளியேறி தனியாக நடந்து சென்றார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘10 அடி நடக்க 10 நிமிடங்கள் ஆகிறது’ மோடியின் கிண்டலை மீறி ஆட்சியை நோக்கி மக்கள் முதல்வர்..
- இன்னைக்கே பதவியை ராஜினாமா செய்கிறாரா முதல்வர்? பரபரப்பாகும் அரசியல் களம்!
- 'தென்கோடியில் மீண்டும் அரியணை ஏறும் 'காங்கிரஸ்' ...முன்னணியில் 'வசந்த குமார்'!
- ரிசல்ட் வந்து சில மணி நேரத்திலேயே ரெடி ஆன ‘முதல்வர்’ நேம் போர்டு .. என்னா கான்ஃபிடன்ஸ்’ வைரல் புகைப்படம்!
- என்ன ஆச்சு? குஷ்புவைத் தொடர்ந்து துரைமுருகனும் மருத்துவமனையில் அனுமதி!
- ‘நார்த்ல ஓகே.. பட் சவுத்ல பாஜக-வின் நிலவரம் என்ன?? கள விவரம் உள்ளே!’
- டெல்லியில் போட்டியிட்ட ‘முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர்’ நிலை என்ன..? மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம்..
- ‘தமிழகத்திற்கான கள நிலவரம்’!.. ‘ தொகுதிவாரியான முழு நிலவரம்’?
- ‘தென் சென்னை, மத்திய சென்னை, வட சென்னை’ மக்களவைத் தொகுதிகள் 3-லும் திமுக முன்னிலை!
- மக்களவைத் தேர்தலில் களத்திலுள்ள ‘நட்சத்திர வேட்பாளர்கள் நிலவரம்’..