கொரோனாவால் உயிரிழந்த பெற்றோர்கள்.. வீடும் கைவிட்டு போன நேரத்தில்.. 27 லட்சம் கடனை செலுத்தி மாணவியை நெகிழ வைத்த பூனாவாலா!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மத்திய பிரதேச மாநிலம், போபால் நகரை சேர்ந்தவர் வனிஷா பதக். 10 ஆம் வகுப்பு பள்ளி மாணவியாக இவர் இருந்த போது, இவரது தாய் மற்றும் தந்தை ஆகிய இருவரும் கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

Advertising
>
Advertising

Also Read | காயத்துடன் களத்தில் போராடிய ரோஹித்.. கணவரை பற்றி உருக்கமாக மனைவி ரித்திகா பகிர்ந்த பதிவு!!..

இதன் காரணமாக, வனிஷாவும் ஆதரவற்ற நிலையில் இருந்துள்ளார். அப்படி ஒரு சூழல் இருந்த போதும் படிப்பில் திறமையாக இருந்த வனிஷா, கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த 10 ஆம் வகுப்பு தேர்வில் 99.8 % மதிப்பெண்கள் பெற்று முதலிடமும் பிடித்துள்ளார்.

இதற்கு மத்தியில், மற்றொரு அதிர்ச்சியும் வனிஷாவுக்கு வந்துள்ளது. தவணையை சரியாக கட்டாத காரணத்தினால் அவருடைய வீட்டை கையகப்படுத்தி நிதி நிறுவனம் நோட்டீஸ் ஒன்றையும் அனுப்பி உள்ளது. இதற்கு மாணவி வனிஷா, தனது நிலையை விளக்கி கடனை கட்டுவதற்கு கால அவகாசம் வேண்டும் என்றும் கடிதம் எழுதியது தொடர்பான செய்திகள் கூட ஊடகங்களில் அதிகம் வெளியாகி பரவலாக பேசப்பட்டிருந்தது.

இதனை அறிந்து கொண்டு பலரும் வனிஷாவுக்கு உதவ முன் வந்தனர். சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி அதார் பூனாவாலா உள்ளிட்ட பலரும் கடனை அடைக்க முன் வந்துள்ளனர். ஆனால், வனிஷாவுக்கு அப்போது 18 வயது ஆகாத காரணத்தினாலும், சட்டப்பூர்வ பாதுகாவலர் இல்லாததாலும் இந்த விவகாரத்தில் சட்ட சிக்கல் ஏற்பட்டதாக தெரிகிறது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூட இந்த விஷயத்தில் நல்ல முடிவு எடுக்குமாறு வீட்டுக்கடன் பெற்ற எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனத்தை அறிவுறுத்தி இருந்தார்.

அப்படி ஒரு சூழலில், தற்போது வனிஷாவுக்கு 18 வயது பூர்த்தி ஆனதையடுத்து சீரம் நிறுவன தலைவர் பூனாவாலா தனது அறக்கட்டளையில் இருந்து வனிஷாவின் வீட்டை மீட்பதற்காக சுமார் 27.4 லட்ச ரூபாயை வழங்கி உள்ளார்.

அதார் பூனாவாலாவின் செயலால் நெகிழ்ந்து போன வனிஷா, "கொரோனா தொற்றிற்கு பெற்றோர் இருவரையும் இழந்த என்னை கடன் சுமையில் இருந்து விடுவித்ததுடன் எனது தந்தையின் கனவு இல்லத்தை மீட்டுக் கொடுத்ததற்காக பூனாவாலாவுக்கு எப்போதும் நன்றிக் கடன் பட்டுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.

Also Read | கையில காயத்தோட.. உள்ள வந்து கெத்து காட்டிய ரோஹித்.. "இப்டி ஒரு ரெக்கார்ட் வேற மனுஷன் பண்ணிட்டு போய்ட்டாரா?"

MADHYA PRADESH, ADAR POONAWALA, HOUSE LOAN, STUDENT, PARENT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்