ஆந்திர அமைச்சரவையில் இடம்பிடிப்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நடிகை ரோஜாவிற்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஆந்திராவில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்றார். அவருடன் 5 துணை முதல்வர்கள் உள்பட 25 அமைச்சர்கள் கடந்த சனிக்கிழமையன்று பதவியேற்றனர். நகரி தொகுதியின் எம்எல்ஏவும், நடிகையுமான ரோஜா ஜெகன்மோகன் ரெட்டியுடன் இணைந்து சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக மிகப்பெரிய அளவில் இந்த தேர்தலில் பிரச்சாரம் செய்தார்.
இதனால் இவருக்கு அமைச்சர் பதவி அல்லது துணை முதல்வர் பதவி கிடைக்கும் என அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் ரோஜாவுக்கு எந்தப் பதவியும் வழங்கப்படவில்லை. இதனால் அவர் அதிருப்தியில் இருப்பதாக செய்திகளும் வெளியாகின. இந்நிலையில், ஆந்திர சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று தொடங்கி உள்ளது. இதில் பங்கேற்பதற்காக விஜயவாடாவுக்கு வந்த ரோஜா, 'அமைச்சர் பதவி கிடைக்காததால் எந்த வருத்தமும் இல்லை என்றார்.
ஜாதிகளின் அடிப்படையில் தனக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை என்றும், கட்சியின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பணியாற்றுவேன் என்றும்' கூறினார். இதனிடையே திடீர் திருப்பமாக ஆந்திர அரசின் தொழிற்சாலைகள் உள்கட்டமைப்பு கழகத்தின் தலைவராக ரோஜா நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆந்திர அரசின் முக்கியத்துவம் வாய்ந்த இந்த பொறுப்பை, ரோஜா ஏற்றுக்கொண்டவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'துணை முதல்வராகும் நடிகை ரோஜா?'... பரபரக்கும் அரசியல் களம்!
- 'வெளியேறிய நடிகை திவ்யா ஸ்பந்தனா'... 'அதிர்ச்சியடைந்த காங்கிரஸ் தொண்டர்கள்'!
- விரைவில் தமிழக முதல்வராக வர வேண்டும்.. மு.க.ஸ்டாலினை வாழ்த்திய ஜெகன்!
- 'மின்துறை அமைச்சராக நடிகை ரோஜா??'... 'இன்ப அதிர்ச்சி கொடுக்க ஜெகன் முடிவு?'...
- 'மோடிக்கு கெடைச்ச வெற்றியா? அது ரஜினிக்கு! என்னப் பொருத்தவரை, இது வாக்கு எந்திரத்தோட வெற்றி’.. அரசியல் பிரபலம்!
- 'அதுக்கு சான்ஸ் இருக்கா?'.. ‘வெய்ட் அண்ட் சீ’..ஸ்டாலின் சொன்ன பஞ்ச் பதில்!
- 'பிடிவாதம் பிடிக்கும் ராகுல் காந்தி?'... அடுத்தது என்ன??
- 'நேரு, இந்திரா காந்தி வரிசையில் முன்னேறும் நரேந்திர மோடி'!
- பிறந்த குழந்தைக்கு ‘மோடியின்’ பெயரைச் சூட்டிய முஸ்லீம் தாய் சொல்லும் காரணம்!
- 'தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு' லஞ்ச்க்கு ‘நோ’ சொல்லும் லாலு? இதுதான் காரணமா?