'மின்துறை அமைச்சராக நடிகை ரோஜா??'... 'இன்ப அதிர்ச்சி கொடுக்க ஜெகன் முடிவு?'...
முகப்பு > செய்திகள் > இந்தியாஆந்திர முதல்வராக பதவியேற்க உள்ள ஜெகன்மோகன் ரெட்டி, நடிகை ரோஜாவுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்க காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆந்திராவில் ராயலசீமா பகுதியில் சித்தூர் மாவட்டத்தில் உள்ளது நகரி சட்டசபை தொகுதி. இந்தத் தொகுதியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வேட்பாளராக நடிகை ரோஜா போட்டியிட்டார். இதில், ரோஜா 79,499 வாக்குகள் பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட தெலுங்கு தேசம் வேட்பாளர் காளி பானு பிரகாஷ் 76,818 வாக்குகள் பெற்றார். எனவே, 2,681 வாக்குகள் வித்தியாசத்தில் ரோஜா வெற்றி பெற்றார்.
கடந்த 2014 சட்டசபை தேர்தலில் இதே தொகுதியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ரோஜா தன்னை எதிர்த்து போட்டியிட்ட தெலுங்கு தேசம் வேட்பாளரைவிட 858 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார். தொடக்கத்தில் தெலுங்கு தேசம் கட்சியில் இருந்த ரோஜா, அங்கு உரிய மரியாதை கிடைக்காததால் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசுக்கு தாவினார்.
ஜெகன்மோகன் ரெட்டிக்காக பல போராட்டங்களை நடத்தினார். ரோஜா பிரசாரம் செய்த இடங்களில் 97 சதவீதம் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. இந்த சட்டசபை தேர்தலில் ரோஜாதான் அங்கு கேம் சேஞ்சராக மாறி உள்ளார். அதனால் ரோஜாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.
அவருக்கு மின்சாரத்துறை வழங்கப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இன்று பிற்பகல் 12.30 மணியளவில் நடைபெறு அமைச்சரவை பதவியேற்பு விழாவில் ரோஜா அமைச்சராக பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனிடையே, தனக்கு எந்த பொறுப்பு கொடுத்தாலும் அதனை செய்ய தயாராக உள்ளதாக நடிகை ரோஜா புதன்கிழமையன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். தனது சகோதரிப் போல் ஜெகன் மோகன் ரெட்டி, தன்னைப் பார்ப்பதாகவும் ரோஜா கூறியுள்ளார்.
இந்நிலையில் இந்த விழாவில் ஜெகன் மோகன் மட்டுமே பதவியேற்க உள்ளதாகவும், அவரது அமைச்சரவை சகாக்கள் வரும் 7-ம் தேதி பொறுப்பேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. பதவியேற்புக்கு பிறகு ஆந்திர மாநிலத்துக்கான தொலைத் நோக்கு திட்டம் குறித்து உரையாற்றும் ஜெகன் மோகன், தேர்தலில் அளித்த 9 முக்கிய வாக்குகுறுதிகளை தொடர்பான அறிவிப்பை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மற்ற செய்திகள்
‘அது உங்க ஹிஸ்டரி, அத முதல்ல டெலிட் பண்ணுங்க..’ புகார் கூறியவருக்கு ‘நச் ரிப்ளை அளித்த ஐஆர்சிடிசி..’
தொடர்புடைய செய்திகள்
- ‘மருமகள் வைச்ச மட்டன் குழம்பு நல்லா இல்லைணு சொன்னது ஒரு குத்தமா’.. அப்பாவுக்கு மகன் கொடுத்த கொடூர தண்டனை!
- எம்.பி.யான இன்ஸ்பெக்டர்... முன்னாள் டி.எஸ்.பி.க்கு சல்யூட்... வைரலான புகைப்படம்!
- பதவியை ராஜினாமா செய்யும் ஆந்திர முதல்வர்? பரபரப்பாகும் அரசியல் களம்!
- மாணவர்களுடன் சேர்ந்து போராட்ட அறிவிப்பு: வீட்டுக்காவலில் புகழ்பெற்ற நடிகர்!