விமானம் தரையிறங்கும் முன்பு 'நடிகை ரோஜா' சொன்ன தகவல்...! என்ன நடந்தது...? - பதற வைக்கும் 'திக்திக்' நொடிகள்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகையாக இருந்தவர் ரோஜா. சமீப காலங்களாக ஆந்திர அரசியல் களத்தில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் அரசியல் ஆளுமை.

Advertising
>
Advertising

தற்போது, ஜெகன்மோகன் ரெட்டி தலமையிலான ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸில் எம்.எல்.ஏவாக இருக்கிறார். இந்த நிலையில் இன்று (14-12-2021) விமானத்தில் ராஜமுந்திரியில் இருந்து திருப்பதிக்கு பயணித்து உள்ளார். திருப்பதி விமான நிலையத்தை அடைந்தபோது, அவருடைய விமானம் தரையிறங்குவதில் சிக்கல் உருவாகி உள்ளது. விபத்து ஏற்படும் சூழல் உருவான காரணத்தினால், விமானி சாதுர்யமாக செயல்பட்டு விமானத்தை பெங்களூருவை நோக்கி திருப்பியுள்ளார்.

இது பற்றி வீடியோ வெளியிட்டுள்ள நடிகை ரோஜா, ராஜமுந்திரியில் இருந்து திருப்பதி நோக்கி சென்ற விமானத்தில் பயணிக்கிறேன். விமானம் தரையிறங்கும் நேரத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு இருப்பதாக அறிவித்துள்ளார்கள் என வீடியோ வெளியிட்டார்.

அவரின் இந்த வீடியோ சமூகவலைதளங்களில் தீயாக பரவியது. ஆயினும், விமானம் பெங்களூருவுக்கு திருப்பவிடப்பட்டு, பத்திரமாக தரையிறக்கப்பட்டது.

இந்த நிலையில் பெங்களூரு விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கிய அந்த விமானத்தில் இருந்து பயணிகளை வெளியே விடாமல் நான்கு மணிநேரம் கதவு அடைக்கப்பட்டு வைத்திருந்ததாகவும், என்ன பிரச்சனை என்பதை விமானிகள் கூறவில்லை எனவும் நடிகை ரோஜா தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் குன்னூரில் விபத்தில் சிக்கி 13 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில் இந்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை ரோஜா, ROJA, FLIGHT, ACCIDENT, விமானம்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்