'சிறுநீர் பரிசோதனையில் நடிகை செய்த சீட்டிங்?'.. 'வெட்கக் கேடானது' என அதிகாரிகள் தகவல்! தடதடக்கும் போதைப்பொருள் வழக்கு!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

நடிகைகள் ராகினி, சஞ்சனா ஆகியோர், மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் போதை பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டதை அடுத்து 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

பெங்களூர் மடிவாளா மகளிர் கைதிகள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள இவர்கள், மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துவதற்காக பெங்களூர் கே.சி. அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அதில் நடிகை சஞ்சனா மருத்துவ பரிசோதனைக்கு ஒத்துழைக்க மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன்,  தனது வழக்கறிஞருடன் கலந்தாலோசிக்காமல் சோதனைக்கு உடன்பட முடியாது என்று திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் நீதிமன்ற உத்தரவை அடுத்து, அமைதியாக பரிசோதனைக்கு ஒப்புக்கொண்டார். இந்த பரிசோதனை முடிவுகள் வர ஏழு நாட்கள் ஆகும் என்கிற நிலையில்,  இதே வழக்கில் முதலாக கைது செய்யப்பட்ட முக்கிய நடிகை ராகினி திவேதி தனது சிறுநீர் மாதிரியில் தண்ணீரை கலந்து மருத்துவர்களிடம் கொடுத்ததாகக் கூறப்பட்டதை அடுத்து, அவர்  மல்லேஸ்வரத்தில் உள்ள கே.சி பொது மருத்துவமனையின் மருத்துவர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.

சிறுநீர் மருந்து பரிசோதனை மூலம் ஒருநபர் போதைப்பொருளைப் பயன்படுத்தியிருக்கிறாரா என்பதை  கண்டறிய முடியும். ஆனால் சிறுநீரில் தண்ணீரைச் சேர்ப்பதன் மூலம், அது சிறுநீரின் வெப்பநிலையைக் குறைத்து,  உடல் வெப்பநிலைக்கு சமமானதாக மாற்றிவிடும். இதனால் ராகினி மேலும் தண்ணீர் குடிக்கவும், மற்றொரு சிறுநீர் மாதிரியைக் கொடுக்கவும் மருத்துவர்களால் கேட்டு கொள்ளப்பட்டார். அத்துடன் விசாரணை அதிகாரி, ராகினியின் செயல் "வெட்கக்கேடானது மற்றும் துரதிர்ஷ்டவசமானது" என்று குறிப்பிட்டுள்ளார். இதனிடையே போலீசார் விசாரணைக்கு மேலும் 3 நாட்கள் அனுமதி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்