'மன்னிப்பு கேக்கணும்...'- நடிகை கங்கனாவை சாலையில் தடுத்து நிறுத்திய விவசாயிகள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

நடிகை கங்கனா ரணாவத் பயணித்த காரை நிறுத்தி 'மன்னிப்பு கேட்க வேண்டும்' என விவசாயிகள் வழிமறித்தனர். கங்கனா பஞ்சாப் மாநிலத்துக்குள் விவசாயிகளால் தடுத்து நிறுத்தப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Advertising
>
Advertising

சமீபத்தில் திரும்பப்பெறப்பட்ட விவசாயிகள் சட்டத்தை எதிர்த்து ஓராண்டுக்கும் மேலாக போராடி வந்தனர். அந்த விவசாயிகள் குறித்து நடிகை கங்கனா தான் தெரிவித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என பஞ்சாப் மாநிலத்தில் கங்கனா பயணித்த காரை விவசாயிகள் நிறுத்தினர். தொடர்ந்து டெல்லியில் போராடி வந்த விவசாயிகளுக்கு எதிராக கங்கனா பேசி வருகிறார் என குற்றம் சுமத்தப்படுகிறது.

போராட்டத்தில் ஈடுபடுபவர்களை தீவிரவாதிகள், காலிஸ்தானிஸ், சமுக விரோத சக்திகள் எனப் பலவாறு எதிர்மறை விமர்சனங்களை முன் வைத்தவர் நடிகை கங்கனா. பஞ்சாப் மாநிலத்தில் கிரத்பூர் பகுதியில் தனது பாதுகாப்புப் படை வீரர்கள் உடன் தனது காரில் பயணித்துக் கொண்டு இருந்தார் கங்கனா. அப்போது அங்கு கோஷங்கள் எழுப்பிக் கொண்டே கைகளில் கொடிகள், பதாதைகள் உடன் பல விவசாயிகள் கூடி கங்கனாவின் காரை நிறுத்தினர்.

இதுகுறித்து நடிகை கங்கனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “என்னை ஒரு கூட்டம் இங்கு சூழ்ந்துள்ளது. என்னை திட்டுகிறார்கள். கொலை செய்துவிடுவதாக மிரட்டுகிறார்கள். இந்தக் கூட்டம் பொதுவெளியில் என்னை மிரட்டுகிறது. என்னுடன் பாதுகாப்பு காவலர்கள் இல்லையென்றால் நான் என்ன செய்வேன். நான் என்ன அரசியல்வாதியா? இது என்ன வகையான நடத்தை?” எனப் பேசி அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அதன் பின்னர் அந்தக் கூட்டத்தில் இருந்த சில பெண் போராட்டக்காரர்கள் உடன் பேசிய கங்கனா ஒரு வழியாக சமாளித்து அந்த இடத்தைவிட்டு வெளியேறினார். போராட்டக்காரர்கள் மத்தியில் கங்கனா தான் டெல்லி ஷாஹின் பாக் பகுதியில் மத்திய அரசுக்கு எதிராகவும் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராகவும் போலியான கருத்துகள் உடன் போராடியவர்களைதே சாடியதாகக் கூறினார்.

FARMERSPROTEST, KANGANA RANAUT, PUNJAB FARMERS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்