Hamsa Nandini : "என் அம்மாவின் உயிரை பறித்த நோய்".. புற்றுநோயில் இருந்து மீண்ட ‘நான் ஈ’ பட நடிகை உருக்கம்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

புற்றுநோயிலிருந்து மீண்ட பிரபல தெலுங்கு நடிகை ஹம்சா நந்தினி தற்போது அந்த புற்று நோயில் இருந்து மீண்டு, தான் ஒரு மறுபிறவி போல் உணர்வதாக தெரிவித்துள்ளார்.

Hamsa Nandini : "என் அம்மாவின் உயிரை பறித்த நோய்".. புற்றுநோயில் இருந்து மீண்ட ‘நான் ஈ’ பட நடிகை உருக்கம்...!
Advertising
>
Advertising

Also Read | "எனக்கு என்ன நடந்துச்சோ.. அவங்களுக்கும் அது நடக்கணும்".. பாக். பவுலருக்கு ரிஸ்வான் போட்ட ஆர்டர்.. வீடியோ..!

தமிழிலும் பிரபலமான ‘நான் ஈ’, ‘ருத்ரமாதேவி’ ஆகிய பல படங்களில் நடித்துள்ள பிரபல தெலுங்கு நடிகை ஹம்சா நந்தினி, கடந்த வருடம் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக அறிவித்திருந்தார்.  மேலும், அதற்காக அறுவைச் சிகிச்சை மற்றும் பலமுறை கீமோ சிகிச்சையும் பெற்று வந்தார். அந்த சமயத்தில், “உங்கள் எண்ணங்கள், பிரார்த்தனைகள் மற்றும் ஊக்குவிப்புக்காக அனைவருக்கும் ஒரு பெரிய நன்றி. இந்த கடினமான காலங்களில், உங்கள் கட்டுக்கடங்காத அன்பு வார்த்தைகளால் எனக்கு ஆறுதல் அளித்தது மற்றும் இந்த போரில் நான் தனியாக இல்லை என்று எனக்கு உறுதியளித்துள்ளது.

actress hamsa nandini returns to shoot after battling cancer

all images subject to copyright ℗ to their respective owners.

எனது ரசிகர்கள், நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் சகோதரத்துவத்தின் ஆதரவை தெரிவிக்கும் வகையில், ஒவ்வொரு மூலையிலிருந்தும் இதுகுறித்த கவலைகள் வெளிப்படுவதைக் கண்டு நான் நம்பிக்கைக்கும், அப்பாற்பட்ட பணிவுடன் இருக்கிறேன். நான் வலிமையானவள், அனைவரின் வார்த்தைகளும் என்னை மேலும் வலிமையாக்குகிறது. அன்பு, ஹம்சா” என்று ஹம்சா நந்தினி தெரிவித்திருந்தார்.

all images subject to copyright ℗ to their respective owners.

இந்நிலையில் இப்போது அந்த புற்றுநோயில் இருந்து குணமடைந்துள்ள நடிகை ஹம்சா நந்தினி, கடந்த வியாழக்கிழமை தனது 38வது பிறந்த தினத்தை, ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து கொண்டாடியதுடன்  “நான் மீண்டு மீண்டும் வந்துவிட்டேன். இப்போது மறுபிறவி எடுத்தது போல உள்ளது. என் அம்மாவின் உயிரை பறித்த அதே புற்றுநோயில் இருந்து நான் மீண்டுள்ளேன். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் அன்பு முத்தங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Also Read | நடிகையை கொன்று உடலை ஆற்றில் வீசிய மகன்.. சொத்து தகராறா? பாலிவுட்டை அதிரவைத்த கொடூர சம்பவம்..! veena kapoor

HAMSA NANDINI

மற்ற செய்திகள்