“கம் ஆன் ஜாயின் வித் மீ!” .. ‘பாட்டு பாடி’ பெண் காவலர் எடுத்த வித்யாசமான முயற்சி! வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பெங்களூருவில் பெண் காவல் அதிகாரி ஒருவர் பாட்டு பாடி கொரோனா குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தியுள்ள நெகிழ்ச்சியான சம்பவத்தை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பு உலகம் முழுவதும் மின்னல் வேகத்தில் பரவிக் கொண்டு வரும் சூழ்நிலையில் இந்த கொடிய ஆட்கொல்லி நோய்க்கு இதுவரை 20 ஆயிரத்துக்கும் மேலானோர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் இந்தியாவில் மட்டும் இதுவரை 600 பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. தவிர ஏப்ரல் 14-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவும் இந்தியப் பிரதமரால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் அத்தியாவசியத் தேவைகளுக்காக மட்டுமே வெளியே வந்து பொருட்களை வாங்கிக் கொண்டு மற்ற வேளைகளில் வீட்டிலேயும் மக்கள் முடங்கயுள்ளனர். எனினும் இந்த ஊரடங்கு உத்தரவின் நோக்கத்தை புரிந்து கொள்ளாமல் பலரும் அவசியமில்லாமல் வெளியே வந்து செல்வதாகக் தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து கொண்டிருக்கின்றன.  இதனால் பல இடங்களில் காவல்துறையினர் நேரடியாக மக்களை சந்தித்தும், எச்சரித்தும், தேவைப்படும் இடத்தில் தடியடி நடத்தியும் மக்களுக்கு கொரோனாவைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய சூழ்நிலை உண்டாகிறது.

இந்த நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பெண் காவலர் அதிகாரி தபாரக் பாத்திமா பாடல் பாடி கொரோனா குறித்த விழிப்புணர்வை புலிகேசி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் குடி இருக்கும் மக்களுக்கு வழங்கிய நிகழ்வு வீடியோவாக சமூக வலைதளங்களில்

வைரலாகி வருகிறது.

BANGALORE, VIDEOVIRAL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்