ஜாமீன் கேட்டு விண்ணப்பித்த நபர்.. நீதிபதி போட்ட வித்தியாசமான கண்டிஷன்.. இது புதுசா இருக்கே..!
முகப்பு > செய்திகள் > இந்தியாமத்திய பிரதேச மாநிலத்தில் கொலை முயற்சி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஜாமீன் கொடுக்க நீதிபதி வித்தியாசமான நிபந்தனை ஒன்றை விதித்திருக்கிறார். இது பலரையும் ஈர்த்துள்ளது.
Also Read | சுத்தி கடல்.. ஃபுல் WiFi.. உலகத்தின் வைரல் வீட்டுக்கு இவ்வளோ டிமாண்டா? விலை எவ்வளவு? அப்படி என்ன இருக்கு ?
கொலை முயற்சி வழக்கு
மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள உயர் நீதிமன்றத்தில் கடந்த வாரம் கொலை முயற்சி வழக்கு ஒன்றின் விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கில் ரிங்கு ஷர்மா என்பவர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இந்நிலையில் ரிங்கு ஷர்மா தனக்கு ஜாமின் வேண்டுமென நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் பொது மக்களுக்கு உதவும் வகையில் தொண்டு நடவடிக்கைகளில் தான் ஈடுபட ஆர்வத்துடன் இருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார் ரிங்கு ஷர்மா.
இந்த மனுவை பரிசீலித்த குவாலியர் உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்தக் பதக், ஒரு லட்ச ரூபாய் தனிப்பட்ட பிணையில் ரிங்கு ஷர்மாவிற்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். அதோடு ஷர்மாவிற்கு நிபந்தனை ஒன்றினையும் நீதிபதி விதித்தார்.
நிபந்தனை
கொலை முயற்சி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த ரிங்கு ஷர்மா பத்து மரக் கன்றுகளை நட வேண்டும் என நீதிபதி ஆனந்த் உத்தரவிட்டார். வேம்பு அல்லது பழ மரங்கள் உள்ளிட்ட கன்றுகளை ரிங்கு ஷர்மா வளர்க்கலாம் எனவும் அதற்கான செலவை அவரே ஏற்க வேண்டும் எனவும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார். மேலும், மரக் கன்றுகள் நடும் இடங்களை ஷர்மாவே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் எனவும் ஆறு மாத காலத்திற்குள் மூன்று மாதத்திற்கு ஒருமுறை என அந்த மரக் கன்றுகளின் புகைப்படங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. நீதிமன்றம் விதித்த நிபந்தனையை மீறினால் ஷர்மாவின் ஜாமின் ரத்து செய்யப்படும் எனவும் நீதிபதி எச்சரித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலத்தில் கொலை முயற்சி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர் 10 மரக் கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும் என அம்மாநில உயர் நீதிமன்றம் நிபந்தனை விதித்து இருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹிஜாப் விவகாரத்தில் நீதிமன்றம் வெளியிட்ட பரபரப்பு தீர்ப்பு..!
- 30 வருடத்துக்கும் மேல் சிறைவாசம்.. முதன்முறையாக பேரறிவாளனுக்கு ஜாமீன் - உச்சநீதிமன்றம் உத்தரவு..!
- ஆர்யன் கானுக்கு அளிக்கப்பட்ட நிபந்தனை ஜாமினில் 'புதிய' மாற்றம்...! - மும்பை உயர்நீதிமன்றம் அறிவிப்பு...!
- நான் ஒரு 'தன்பாலின' ஈர்ப்பாளர்...! வெளிப்படையாக அறிவித்தவர் உயர்நீதிமன்ற 'நீதிபதியாக' வாய்ப்பு...! - யார் இவர்...? - பரிந்துரைத்த உச்ச நீதிமன்றம்...!
- திருமணமான பெண்ணுக்கு ‘லவ் லெட்டர்’ கொடுத்தால் என்ன ஆகும்? பரபரப்பான வழக்கில்... அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்!
- எச்.ராஜாவுக்கு புதிய நெருக்கடி!.. கைவிரித்த உயர்நீதிமன்றம்!.. 2 ஆண்டுகளுக்கு பின் சூடுபிடிக்கும் விசாரணை!
- தம்பி விஜயை 'பழிவாங்க' துடிக்குறாங்க...! 'இது கொஞ்சம் கூட நியாயம் இல்ல...' 'துணிந்து நில் தம்பி...' அஞ்சுவதும் அடிபணிவதும் தமிழர் பரம்பரைக்கே கிடையாது...! - விஜய்க்கு ஆதரவாக சீமான் அறிக்கை...!
- பைக்ல 'அந்த பார்ட்ட' கழட்டிட்டு ஓட்டுனா... '500 ரூபாய் அபராதம் ...' 'வாரன்டி' கெடையாதுன்னும் சொல்லிடுங்க...! - சென்னை உயர் நீதிமன்றம் 'அதிரடி' அறிவிப்பு...!
- 'வேணும்னே அப்படி சொல்லல...' 'ஆக்சுவலா நான் என்ன சொல்ல வந்தேன்னா...' - முன்ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்த மன்சூர் அலிகான்...!
- 'ஃபீஸ் கட்டினாலே அரியர் எக்ஸாம் பாஸ் என்ற கவர்ன்மென்ட் ஆர்டர் குறித்து...' - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி கருத்து...!