தலைக்குள் தங்கம்.. என்ன ட்ரிக்ஸ்-ஆ யோசிக்கிறாங்க.. விக்கை வேட்டையாடிய கஸ்டம்ஸ் ஆபிசர்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

அபுதாபியிலிருந்து 30 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை தலையில் வைத்து கடத்தி வந்த நபரை டெல்லி விமான நிலைய கஸ்டம்ஸ் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

Advertising
>
Advertising

ரகசிய தகவல்

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியிலிருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்தப்படுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது. இதனையடுத்து டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் சோதனைகளை முடுக்கி விட்டது சுங்கத்துறை. அனைத்து பயணிகளையும் பரிசோதித்த பிறகும் சட்டத்திற்கு புறம்பாக எதுவும் நடைபெறவில்லை என்று தெரிந்ததால் கஸ்டம்ஸ் அதிகாரிகள் குழப்பம் அடைந்தனர்.

இதனை அடுத்து அபுதாபியில் இருந்து வந்த பயணிகளை தனித்தனியாக பரிசோதிக்க திட்டமிட்டு இருக்கின்றனர் அதிகாரிகள். அப்போது பயணி ஒருவர் சந்தேகத்திற்கிடமாக நடந்துகொண்டதை அதிகாரி ஒருவர் பார்த்து இருக்கிறார். அவரை தனியே அழைத்துச் சென்ற சுங்கத்துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் விக் அணிந்திருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து அவருடைய விக்கை அகற்றுமாறு அதிகாரிகள் கூறவே அவரது தலைக்குள் இருந்த தங்கத்தினை கண்டு அங்கிருந்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

தலைக்குள் தங்கம்

தொடர்ந்து அவரிடம் நடத்திய சோதனையில் தலை மற்றும் ஆசன வாயில் வைத்து தங்கம் கடத்தி வந்ததாக அந்த பயணி ஒப்புக்கொண்டார். இதனையடுத்து அவரை சுங்கத் துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து 630.45 கிராம் எடை கொண்ட தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அதன் சந்தை மதிப்பு 30 லட்ச ரூபாய் எனவும் சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அந்த பயணியிடம் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்தில் ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த ஒரு இளைஞரும் இதே பாணியில் தங்கத்தினை கடத்த முயற்சித்து கைதானது குறிப்பிடத்தக்கது.

தற்போது அபுதாபியில் இருந்து தங்கம் கடத்தி வந்த நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்த சம்பவம் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

AIRPORT, WIG, GOLD, SMUGGLING, விமானநிலையம், தங்கம், கடத்தல், விக்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்