கள்ள உறவை நேரில் கண்ட கன்னியாஸ்திரிக்கு நடந்த கொடுமை.. திடீர் திருப்புமுனையை ஏற்படுத்திய ‘திருடன்’.. சிபிஐ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கேரளாவை உலுக்கிய கன்னியாஸ்திரி அபயா கொலை வழக்கில் திருவனந்தபுரம் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

கள்ள உறவை நேரில் கண்ட கன்னியாஸ்திரிக்கு நடந்த கொடுமை.. திடீர் திருப்புமுனையை ஏற்படுத்திய ‘திருடன்’.. சிபிஐ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!

கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி அபயா என்ற கல்லூரி மாணவி, செயின் பயஸ் கான்வென்டில் தங்கி படித்து வந்தார். கடந்த 1992-ம் ஆண்டு கான்வென்ட் வளாகத்தில் உள்ள கிணறு ஒன்றில் அபயா மர்மமான முறையில் இறந்து கிடந்தார். 19 வயதே ஆன கன்னியாஸ்திரி மர்மமாக இறந்தது அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கொலையா? அல்லது தற்கொலையா? என விசாரணை மேற்கொண்டனர்.

Abhaya case: Priest, Nun sentenced to life imprisonment by CBI court

இதனை அடுத்து அபயா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி மனித உரிமை ஆர்வலர் ஜோமோன் என்பவர் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனைத் தொடர்ந்து நடந்த சிபிஐ விசாரணையில் பாதிரியார் தாமஸ் கோட்டூர், ஜோஸ் புத்ருக்கயில் மற்றும் கன்னியாஸ்திரி செபி ஆகியோர் அபயாவை கிணற்றில் தள்ளி கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சம்பத்தன்று அபயா சமையலறைக்கு தண்ணீர் குடிக்க சென்றுள்ளார். அப்போது பாதிரியார்களும், கன்னியாஸ்திரி செபியும் நெருக்கமாக இருந்ததை பார்த்துள்ளார். தங்களது தகாத உறவு வெளியே தெரிந்துவிடுமோ என்ற பயத்தில் கன்னியாஸ்திரி அபயாவை கொலை செய்துள்ளனர். கடந்த 2008-ம் ஆண்டு மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர். இதனை அடுத்து இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க கோரி கேரள உயர்நீதிமன்றத்தை மூவரும் அணுகினர்.

அதில் பாதிரியார் ஜோஸ் புத்ருக்கயில் மட்டும் போதிய ஆதாரங்கள் இல்லாததால் விடுவிக்கப்பட்டார். மற்ற இருவர் மீது கடந்த 28 ஆண்டுகளாக வழக்கு நடைபெற்று வந்தது. இதில் 177 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டுள்ளன. கன்னியாஸ்திரி அபயாவின் ஆசிரியை தெரசம்மா சிபிஐ நீதிமன்றத்தில் சாட்சி அளித்தார். தெரசம்மா அளித்த சாட்சியத்தில் இரண்டு பாதிரியார்களும் தொடர்ந்து கன்னியாஸ்திரிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக புகார் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் அளித்த சாட்சியத்தில் இரண்டு பாதிரியார்களும் சுவர் ஏறி குதித்து கன்னியாஸ்திரிகள் வசிக்கும் பகுதிக்கு சென்றதாக தெரிவித்தனர். இந்த நிலையில் கன்னியாஸ்திரி செபிக்கு மருத்துவர்கள் மேற்கொண்ட கன்னித்தன்மை பரிசோதனையில் பகீர் தகவல் வெளியானது. தான் கன்னித்தன்மையுடன் இருப்பதுபோல் காட்டிக்கொள்வதற்காக கன்னியாஸ்திரி செபி அறுவை சிகிச்சை செய்திருப்பதைக் கண்டுபிடித்ததாக, ஆழப்புழா அரசு மருத்துவமனையின் மகப்பேறு பிரிவு தலைவர் லலிதாம்பா மற்றும் டாக்டர் பிரேமா ஆகியோர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இந்த வழக்கில் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது திருடர் ஒரு அளித்த சாட்சிதான். சம்பவத்தன்று அலக்கா ராஜூ என்ற திருடர் அங்கே திருடச் சென்றுள்ளார். அப்போது இரண்டு பாதிரியர்கள் மற்றும் ஒரு கன்னியாஸ்திரி அந்த வளாகத்துக்குள் சுற்றி வந்ததைப் பார்த்ததாக சிபிஐ நீதிமன்றத்தில் சாட்சி அளித்தார். இதனை அடுத்து வழக்கின் விசாரணை தீவிரமாக நடைபெற்றது.

இந்த நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த சிபிஐ  சிறப்பு நீதிமன்ற நீதிபதி சனில் குமார், பாதிரியார் தாமஸ் கோட்டூர், கன்னியாஸ்திரி செபி ஆகியோர் குற்றவாளிகள் என்றும், அவர்களுக்கு ஆயுள் தண்டனை மற்றும் 5 லட்சம் ரூபாய் அபராதமும் விதிப்பதாக தீர்ப்பளித்தார். இதைக் கேட்ட பாதிரியாரும், கன்னியாஸ்திரியும் கதறி அழுதனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்