‘புற்றுநோய் பாதித்த’... ‘7 வயது இந்திய சிறுவனின்’... ‘நெடுநாள் ஆசையை நிறைவேற்றிய’... 'துபாய் இளவரசர்'!
முகப்பு > செய்திகள் > இந்தியாபுற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் 7 வயது இந்தியச் சிறுவனின் நெடுநாள் ஆசையை துபாய் நாட்டின் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் நிறைவேற்றி வைத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் தெலுங்கானா மாநில தலைநகரான ஹைதராபத்தை சேர்ந்த 7 வயது சிறுவன் அப்துல்லா. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இந்த சிறுவன், புற்றுநோய் கட்டியினால் ஏற்பட்ட வலி, வேதனை மற்றும் ‘கீமோதெராபி’ சிகிச்சை ஆகியவற்றால் அப்துல்லாவால் பள்ளிக் கல்வியை தொடர இயலவில்லை. இதனால் வீட்டில் ஓய்வாக இருந்த வேளைகளில் ’யூடியூப்’ வலைத்தளத்தில் வீடியோக்களை பார்ப்பதில் அப்துல்லா ஆர்வம் காட்ட ஆரம்பித்தான். இந்த வீடியோக்களில் துபாய் நாட்டின் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பற்றிய சில தொகுப்புகள் அவனை வெகுவாக கவர்ந்திழுத்ததுடன், அவரை ஹீரோவாகவும் நினைக்க ஆரம்பித்தான்.
நாளடைவில், பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தானின் ரசிகராக மாறிப்போன அப்துல்லா, அவரை எப்படியாவது ஒருமுறை நேரில் சந்திக்க வேண்டும் என்னும் தனது பேரார்வத்தை பெற்றோரிடம் தெரிவித்திருந்தான். இதைத் தொடர்ந்து அப்துல்லா சமூக வலைதளத்தில் அவரைச் சந்திக்க விரும்புவதாகக்கூறி வீடியோ ஒன்றையும் பகிர்ந்திருந்தார். பின்னர், இது தொலைக்காட்சிகளிலும் செய்தியானது. இதன் மூலமாக பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் கவனத்துக்கு சென்றது.
தற்போது புற்றுநோயின் மூன்றாம் நிலை தாக்கத்துக்கு உள்ளாகி இருக்கும் இந்தியச் சிறுவன் அப்துல்லாவை சந்திக்க அவர் உடனடியாக விருப்பம் தெரிவித்தார். இதையடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் வாழும் அரண்மனைக்கு தனது பெற்றோருடன் சென்ற அப்துல்லா அவரை ஆரத்தழுவி, அவருடன் பேசிச் சிரித்து மகிழ்ந்தான். சுமார் 15 நிமிடங்கள் நிகழ்ந்த இந்த அபூர்வ சந்திப்பின்போது பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் வெளிப்படுத்திய அன்பு மற்றும் அவரது எளிமையான - அடக்கமான அணுகுமுறைகள் போன்றவை தங்களை வெகுவாக வசீகரித்து விட்டதாக அப்துல்லாவின் தாயார் நவ்ஷீன் பாத்திமா பூரிப்புடன் கூறுகிறார்.
மேலும் தனது மகன் அப்துல்லா, தனது நிஜ வாழ்க்கையின் ஹீரோவை அவன் சந்தித்துள்ளான் என்று தெரிவித்தார். அப்துல்லாவை பாதித்துள்ள நோய்க்கு இனி செய்ய திட்டமிட்டுள்ள சிகிச்சை முறைகளை இளவரசர் ஷேக் ஹம்தான் அக்கறையுடன் கேட்டறிந்ததுடன் இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படங்களை ‘துணிச்சல் மிக்க இந்தச் சிறுவனை இன்று சந்தித்தேன்’ என்ற குறிப்புடன் தனது ‘இன்ஸ்ட்டாகிராம்’ பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- இந்தியாவில் ‘30 பேருக்கு’ கொரோனா பாதிப்பு... ‘அடுத்த’ அறிவிப்பு வரும் வரை... அலுவலகத்தை ‘மூடிய’ பிரபல ‘ஐடி’ நிறுவனம்...
- இந்த ‘அற்புதமான’ சர்பிரைஸுக்கு நன்றி!... ‘சென்னைக்காரருக்கு’ துபாயில் அடித்த ‘ஜாக்பாட்’...
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...!
- ‘இடத்தை மாத்திய ஆசியக் கோப்பை போட்டி’... ‘இந்தியா - பாகிஸ்தான் விளையாடுமா?’... 'பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி அதிரடி பதில்'!
- ‘சிகரெட் பிடிச்சது அப்பாவுக்கு தெரிஞ்சா அவ்ளோதான்’.. பயத்தில் கல்லூரி மாணவர் எடுத்த விபரீத முடிவு..!
- ‘இது அவங்களுக்கு யூஸ்ஃபுல்லா இருக்கும்’.. முடியை தானம் செய்த கோவை கல்லூரி மாணவிகள்.. நெகிழ வைத்த காரணம்..!
- 'நகை, புடவைகள்' விற்பனை பெயரில் 'வாட்ஸ்ஆப் குரூப்'... 'ஆசைப்பட்டு' இணைந்த 'பெண்களுக்கு'... குரூப் 'அட்மின்' அனுப்பிய 'வேறமாதிரி' படங்கள்...
- WATCH VIDEO: ‘நிஜ அயர்ன் மேன் இவர் தானோ’... ‘சீறிப் பாய்ந்து சாகசம் புரிந்த இளைஞர்’... 'ஜெட் பேக் இயந்திரம் மூலம் நடந்த அதிசயம்'!
- 'இந்தியா' வல்லரசாக 'சுப்பிரமணியன் சுவாமி' தரும் சூப்பர் 'ஐடியா'... 'அது' மட்டும் நடக்கலன்னா, 'சீனாவுக்கு' டஃப் கொடுக்க 'முடியாது'...
- லாரி ‘மோதியதில்’ மேம்பாலத் தடுப்பை ‘உடைத்துக்கொண்டு’... ‘50 அடி’ பள்ளத்திற்குள் ‘பாய்ந்த’ கார்... ‘காப்பாற்ற’ சென்றவர் உட்பட 3 பேருக்கு நேர்ந்த ‘பரிதாபம்’...