”வெண்டிலேட்டர் ஆக்சிஜன் ஸ்டாப் பண்ணியதால்... என் ஹார்ட் நிற்க போகுது, டாடி...” - வீடியோ காலில் கதறிய மகன், செய்வதறியாமல் தவித்த தந்தை!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஹைதராபாத்தில் கொரோனா சிகிச்சை பெற்று வரும் இளைஞர் தனக்கு ஆக்சிஜன் கொடுப்பதை நிறுத்துவிட்டதால்  கடைசி நேரத்தில் இளைஞர் வெளியிட்ட வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

ஹைதராபாத்தில் கொரோனா பாதிப்படைந்த 34 வயது இளைஞர் ஒருவர் அரசு செஸ்ட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். தற்போது அவர் மருத்துவமனையில் இருக்கும் போது, மருத்துவர்கள் அலட்சியத்தால் வெண்டிலேட்டர் நீக்கப்பட்டதாகவும், அதனால் தனக்கு மூச்சு விட சிரமமாக உள்ளது, தான் சீக்கிரம் சாகப் போவதாக வீடியோ பதிவிட்டு தன் அப்பாவிற்கு அனுப்பியுள்ளார். மேலும் வீடியோவில் இருக்கும் இளைஞர் சிகிச்சை பலனின்றி இருந்துள்ளதாக மருத்துவ நிர்வாகம் கூறியுள்ளது.

தன் அப்பாவிற்கு அனுப்பிய வீடியோவில், அப்பா எனக்கு மூச்சு விடமுடில. நான் கெஞ்சி கெஞ்சி கேட்டேன், அப்பவும் நான் சொல்றத கேக்காம வென்டிலேட்டரை நீக்கி, ஆக்சிஜன் சப்ளைய நிப்பாட்டிட்டாங்க. நான் 3 மணி நேரமா மூச்சு விட முடியாம கஸ்டபட்டுட்டு இருக்கேன். இனியும் என்னால இப்படி இருக்க முடியும்ணு தோணல டாடி. என் ஹார்ட் நிக்க போது, உங்கட்ட ஒன்னு சொல்லணும் லவ் யூ டாடி பாய் டாடி' என மூச்சு வாங்கி கொண்டு பேசும் வீடியோவை தன் தந்தைக்கு அனுப்பியுள்ளார்.

இதனை பார்த்த இளைஞரின் அப்பா இதயம் நொறுங்கி அழுதுள்ளார். என்னுடைய பேர பிள்ளைகளுக்கு என்ன பதில் சொல்வேன் என கதறிய இளைஞரின் தந்தை, 'என்னோட மகனுக்கு ஆக்சிஜன் ஏன் கொடுக்கல? அவன் உதவி கேட்டுட்டு இருந்தான், யாருமே அங்க இல்ல, வெண்டிலேட்டர அவன்கிட்ட இருந்து ஏன் எடுக்கணும்,  என்னோட மகன் எங்க கூட இருக்கப் போறதில்ல. ஆனா இதுக்கெல்லாம் எனக்கு பதில் வேணும்' என புலம்பி அழுதுள்ளார்.

மேலும் இதுகுறித்து மருத்துவமனை தரப்பில், சிகிச்சை பெற்று வந்த இளைஞருக்கு அவருக்கு ஏற்கனவே இதயப் பிரச்னை இருந்தது. மருத்துவர்கள் தரப்பில் எந்த தவறும் இல்லை என கூறியுள்ளது.

இதற்கு முன்பாகவே ஹைதராபாத்தில் கொரோனா நோய் தொற்று நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என பல குற்றசாட்டுகள் எழுந்துள்ள நிலையில் இளைஞர் வெளியிட்ட இந்த வீடியோ கூடுதலாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்