'குட்டி யானையை தோளில் சுமந்த இளைஞர்...' 'பள்ளத்தில் தவித்துக் கொண்டிருந்த குட்டியை...' 'மீண்டும் ட்ரெண்டிங் ஆன நெகிழ்ச்சி சம்பவம்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 100 கிலோ எடையுள்ள யானையை அல்லேக்காக தூக்கிக்கொண்டு அம்மாவிடம் சேர்ந்த இளைஞரின் புகைப்படம் மீண்டும் சமூகவலைத்தளங்களில் ட்ரெண்டாக துவங்கியுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது  2017 ஆம் ஆண்டு பழனிசாமி சரத்குமார் என்னும் இளைஞர் மேட்டுப்பாளையத்தில் தமிழக வன ஊழியராக இருந்துள்ளார். அப்போது டிசம்பர் 12 ஆம் தேதி அன்று அவரின் குழுவுக்கு ஒரு அவசரச் செய்தி வந்துள்ளது.

அவர் இருக்கும் பகுதியின் அருகே பெண் யானை ஒன்று சாலையின் குறுக்கே அங்கும் இங்குமாக ஓடி வழி மறித்து கொண்டிருப்பதாக தகவல் வரவே தன் குழுவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளார் பழனிச்சாமி. பின்னர் பட்டாசுகளை வெடிக்க செய்து அங்கிருந்த பெண் யானையை துரத்தி உள்ளனர். ஆனால் தீடீரென ஒரு பெண் யானை இப்படி நடந்துகொண்டதால் சந்தேகம் அடைந்த பழனிச்சாமி அருகில் எங்காவது குட்டி யானை உள்ளதா என்று தேடியுள்ளனர். அப்போது தான் பள்ளத்தில் ஒரு குட்டி யானை சிக்கியதைப்  பார்த்துள்ளனர்.

உடனே பழனிசாமி சரத்குமார் அவரது குழுவுடன் இணைந்து அந்த குட்டி யானையை மீட்க இறங்கியுள்ளனர். ஏற்கனவே அந்த குட்டி யானை மேலே ஏறி வர முயற்சி செய்து களைத்திருந்ததாகவும், அதன் தாய் அருகில் இல்லை என்பதை உணர்ந்த அந்த யானை, நகராமல் முரண்டு பிடித்ததாகவும் கூறியிருந்தார் பழனிசாமி.

பின் பல்வேறு வகையில் முயற்சி செய்து வெற்றிகரமாக யானையை மேலே தூக்கியுள்ளனர். சாலையின் மறு பக்கத்தில் நின்றிருந்த அதன் தாயிடம் குட்டியை சேர்க்க முயன்ற இவர்களை பெரிய யானை தாக்கவும் வாய்ப்பிருப்பதாக உணர்ந்திருந்தனர்.

பாகுபலி படத்தில் வரும் பிரபாஸாக மாறிய பழனிசாமி,  கிட்டத்தட்ட 100 கிலோ எடையுடைய அந்தக் குட்டி யானையை தோளில் சுமந்து தாய் யானைக்கு அருகில் விட்டுள்ளார்.

அவர் யானையை தூக்கி கொண்டு சென்ற கதையையும், போட்டோவை தனது மீண்டும் ட்விட்டரில் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் இந்திய வனத் துறை அதிகாரியான தீபிகா பாஜ்பாய். இதை பார்த்த பலர் இதனை ரீட்விட் செய்தும், பழனிச்சாமி சரத்குமாரை பாராட்டியும் வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்