'ட்விட்டர் அக்கவுண்ட் அட்மின் ஆக யாருக்கு வாய்ப்பு...' 'பிரதமர் மோடியின் அடுத்த சர்ப்ரைஸ் ட்வீட்...' இது மகளிர் தின ஸ்பெஷல்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாதனது ட்விட்டர் பக்கத்தை பெண் ஒருவர் நிர்வகிக்க வாய்ப்பு வழங்க போவதாக பிரதமர் மோடி தற்போது டிவிட்டர் மூலம் அறிவித்துள்ளார்.
சமூக வலைத்தளப் பயன்பாட்டில் இருந்து வெளியேற இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்திருந்தார். இதற்கு பல விமர்சனங்கள் வந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் இருந்து மோடி வெளியேற வேண்டாம் என பலர் கருத்து பதிவிட்டு வந்தனர். '#NoSir', '#nomodinotwitter' என்ற ஹேஷ்டேக்குகளும் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகின்றன.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை இட்டுள்ளார். அதன்படி, வருகிற மார்ச் 8-ம் தேதி மகளிர் தினத்தன்று தனது ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் ஆகிய சமூக வலைத்தளப் பக்கங்களை பெண்கள் நிர்வகிக்கலாம். வாழ்க்கை மற்றும் பணியின் மூலமாக மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்கும் பெண்களிடம் சமூக வலைத்தளப் பக்கங்களை ஒப்படைக்கத் தயார் என்று பதிவிட்டுள்ளார்.
இதற்காக சாதனைப் பெண்கள் தங்களது விபரங்களை எழுத்து மூலமாகவோ, விடியோ பதிவு மூலமாகவோ #SheInspiresUs என்ற ஹேஷ்டேக்கில் ட்விட்டரில் பதிவிட வேண்டும். அதன்பின்னர் தேர்ந்தெடுக்கப்படும் பெண்களுக்கு மோடியின் சமூக வலைதளப் பக்கங்களில் கருத்துகளை பதிவிடும் வாய்ப்புகள் வழங்கப்படும். இது பல பெண்களுக்கு உத்வேகமாக இருக்கும் என அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'நோ ஃபேஸ்புக்...' 'நோ ட்விட்டர்...' 'நோ இன்ஸ்டாகிராம்...' 'பிரதமர்' அதிரடி 'முடிவு'... பதிலுக்கு 'டிரெண்டிங்' ஆகும் 'நோ சார்' ஹேஸ்டேக்...
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...!
- "எரிமலையின் ஓரத்தில் நின்று மகுடி வாசிக்க பாக்காதிங்க..." "அது எப்ப வெடிக்கும்னு தெரியாது..." எச்சரிக்கை விடுக்கும் 'அரசியல்' தலைவர் 'யார்' தெரியுமா?
- "பாத்தா 'மொதிரா' கிரௌண்ட்ல தான் மேட்ச் பார்க்கணும்..." 'புகைப்படத்தை' வெளியிட்டது 'பி.சி.சி.ஐ'... "சுத்தி பாக்கவே '2 நாள்' ஆகும் போல..."
- 'உலகின்' மிகப்பெரிய 'மோடெரா' 'கிரிக்கெட் மைதானம்'... 'வாழ்வில்' ஒரு முறையாவது இங்கு 'மேட்ச்' பார்த்துவிட வேண்டும்... "எங்கிருக்கிறது தெரியுமா?"
- "ஐ... ரோபோ பேசுது"... பேரு வியோமித்ரா...இஸ்ரோவுக்கு போனா கண்டிப்பா மீட் பண்ணுங்க... தலைவி தான் அடுத்து விண்வெளிக்கு போறாங்க...
- ‘தாளாற்றித் தந்த பொருளெல்லாம்’.. ‘திருக்குறளை மேற்கோள்காட்டி பேசி’.. ‘தாய்லாந்தில் அசத்திய பிரதமர் மோடி’..
- இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..!
- வேஷ்டி சட்டையில் மோடி | Video: Dhoti Clad Modi Welcomes Xi JinPing at Chennai's Mamallapuram!
- இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..!