'சோசியல் டிஸ்டன்ஸ் பைக்...' 'என் மகளுக்காக செஞ்சுருக்கேன்...' 'அவங்கள நம்பி பிரயோஜனம் இல்ல...' அசத்தும் தொழிலாளி...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா காலத்திற்கு பிறகு தனது மகள் சமூக இடைவெளியுடன் பயணிக்க நவீன வகையில் இருசக்கர வாகனம் ஒன்றை தயாரித்து அசத்தியுள்ளார் திரிபுரா மாநிலத்தை சேர்ந்த தொழிலாளி.
கொரோனா வைரசை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் வலியுறுத்துவது சமூக இடைவெளியும், தனிமைப்படுத்தி இருந்தலும் தான். இதனை கடைபிடிக்கும் வகையில் புதிய இருசக்கர வாகனம் ஒன்றை வடிவமைத்துள்ளார் திரிபுரா மாநிலத்தை சேர்ந்த ஷாகா(39).
தொலைக்காட்சி பெட்டி பழுதுபார்க்கும் கடையில் வேலை செய்து இவர் தற்போது ஊரடங்கு காலத்தில் தனது நேரத்தை நல்ல வகையில் உபயோகித்துள்ளார் என்றே சொல்லலாம்.
இன்றைய காலகட்டத்தில் வீட்டை விட்டு வெளியே வரும் மக்கள் கண்டிப்பாக சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டும் என அரசு வலியுறுத்தி வருகிறது. இதனால் அனைவரும் பயன்படுத்தும் வகையிலும், சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையிலும் ஒரு இரு வாகனத்தை வடிவமைக்க நினைத்துள்ளார்.
ஷாகாக்கு தெரிந்த பழைய இரும்புப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் பழைய இருசக்கர வாகன எஞ்சின் மற்றும் இருசக்கர பாகங்களையும் வாங்கியுள்ளார். இதனை கொண்டு பேட்டரியால் இயங்கும் சுமார் 3.2 அடி நீளம் உடைய இருசக்கர வாகனத்தை செய்து அசத்தியுள்ளார் ஷாகா. இந்த இரு சக்கர வாகனத்தை தயாரித்தவுடன் அதில் தன் 8 வயது செல்ல மகளை சமூக இடைவெளியை பின்பற்றி இருவரும் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
மேலும் இதுபற்றி அவர்கூறும் போது, ' கொரோனா வைரஸிற்கு மருந்த கண்டுபிடிக்க முடியாத இந்த நேரத்தில், ஊரடங்கு முடிந்ததும் மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றுவார்கள் என நான் நம்பவில்லை. மேலும் பள்ளி திறந்தால் என் மகள் செல்லும் பேருந்து கூட்ட நெரிசலாக இருக்கும் எனவே அவள் தனியே, சமூக இடைவெளியை பின்பற்றி செல்லவேண்டும் என்பதற்காகவே நான் இந்த வாகனத்தை தயாரித்துள்ளேன். எந்த கவலையும் இன்றி நானே என் மகளை பள்ளிக்கு சென்று சேர்ப்பேன்' எனவும் கூறியுள்ளார் ஷாகா.
பேட்டரியால் இயங்கும் இந்த இருசக்கர வாகனம் மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் எனவும், 3 மணி நேரம் சார்ஜ் செய்தால் 80 கிலோ மிட்டர் வரை பயணிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார். இதற்கு சார்ஜ் செய்வதற்கு 10 ரூபாய் மட்டுமே செலவாவதாகவும் ஷாகா தெரிவித்துள்ளார்.
இயற்கைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தாமல் பேட்டரியால் இயங்கும் இந்த வாகனம் பெரிதும் வைரலாகி, திரிபுரா மாநில முதலமைச்சருக்கும் சென்று சேர்ந்தது. இந்த இருசக்கர வாகன வடிவமைப்பையும் ஷாகாவின் முயற்சியையும் கண்டு வியந்த திரிபுரா மாநில முதலமைச்சர் பிப்லாப் குமாரும் பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர் கொரோனா தொற்றை ஒழிக்க சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகனத்தை தயாரித்துள்ள ஷாகாவை நான் வாழ்த்துகிறேன் எனவும் பதிவிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'தீ வச்சு கொளுத்திடுவேன்...' 'பைக் பறிமுதல் செய்ததால்...' 'நெருப்போடு நடுரோட்டில் நடந்த இளைஞர், கடைசியில்...' அதிர்ச்சி சம்பவம்...!
- 'நான் பைக் திருடல, என் ஃப்ரண்ட் தான் திருடினான்...' 'நீ எடுத்துருந்தா கொடுத்துருப்பா...' 'சரி நீ எங்க வீட்டுக்கு வா...' 4 பேர் சேர்ந்து செய்த கொடூர கொலை...!
- ஹேண்டில் பார்க் துவாரத்தில் 'உஷ்.. உஷ்...' சப்தம்...! 'ஸ்கூட்டரில் இருந்த நல்ல பாம்பு...' வைரலாகும் வீடியோ...!
- 'பஸ் கிடைக்காததால் பைக்கில் சென்ற உதவி இயக்குனர்...' 'ஊருக்கு போகும் வழியில்...' உளுந்தூர்பேட்டை அருகே நடந்த கோரம்...!
- ‘திடீரென’ வந்த லாரி... வேகத்தை ‘குறைப்பதற்குள்’ ஹேண்டிலில் ‘சிக்கிய’ பையால்... ‘இன்ஜினியரிங்’ மாணவருக்கு நேர்ந்த ‘கோர’ விபத்து...
- ‘பாப்புலர் ஆயிடலாம்னுதான் இப்படி செஞ்சோம்!’ .. ‘போலீஸை சுத்தலில் விட்டு’ சிசிடிவியால் சிக்கிய இளைஞர்கள்!
- 'என் பொண்ண அவன் 'பைக்'ல உக்கார சொல்லி டார்ச்சர் பண்றான்!'... மாணவியிடம் தகராறு செய்யும் வாலிபர்!... 'மகள்' எடுத்த அதிரடி முடிவால்... விரக்தியில் 'தந்தை'!
- 'சென்னையில்' காணாமல் போன 'பைக்'குக்கு... 'திருநெல்வேலி'யில் அபராதம் விதித்த 'போலீசார்'... 'விசாரணையில்' வெளியான 'திடுக்கிடும்' தகவல்...
- 'என் செல்ல மகளுக்கா இப்படி'... 'துடிதுடித்த இளம் பெண் ஆடிட்டர்'... தந்தை கண்முன் நடந்த கொடூரம்!
- ‘ஹெல்மெட்டுக்குள்’ இருந்த ‘ஆபத்து’ தெரியாமல்... ‘11 கிமீ’ பயணம்... வண்டியை நிறுத்தியபின் ‘அதிர்ந்துபோய்’ மயங்கிய ‘பரிதாபம்’...