'பசங்களுக்கு பாடம் எடுக்குறது மட்டும் டீச்சர் வேலையில்ல' ... நிலத்தை மாணவர்களுக்கு இலவசமாக கொடுத்து ... கேரளத்து ரியல் 'மாஸ்டரின்' நெகிழ்ச்சி கதை!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கேரள மாநிலத்தில் பள்ளி ஆசிரியர் ஒருவர் தனது சொந்த நிலத்தை ஏழை மாணவர்கள் நான்கு பேருக்கு எழுதி கொடுத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கண்ணூர் பகுதியை சேர்ந்தவர் கே.சி. ராஜன். புழாதி அரசு மேல்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு ஆசிரியரான இவர் வரும் 31 ம் தேதி அன்று ஒய்வு பெறவுள்ளார். இந்நிலையில் நான்கு ஏழை மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு தலா ஐந்து சென்ட் நிலத்தை கொடுத்துள்ளார்.

இது குறித்து ஆசிரியர் ராஜன் கூறுகையில், 'எனது குடும்பத்தில் அனைவரும் ஆசிரியர்கள் தான். நானும் கடந்த 34 ஆண்டுகள் ஆசிரியராக பணிபுரிந்துள்ளேன். ஒன்பதாம் வகுப்பு மாணவி ஒருவரின் நிலைமையைக் கண்டு அவர்களுக்கு எனது சொந்த நிலத்தை கொடுக்க வேண்டுமென்ற முடிவு செய்தேன். அந்த மாணவிக்கு வறுமை காரணமாக படிக்க முடியாத நிலை ஏற்பட்ட போது தனது குடும்ப சூழ்நிலை குறித்து என்னிடம் விளக்கினார். அப்போது தான் இது போன்ற மாணவர்கள் நான்கு பேருக்கு எனது நிலத்தை அளித்து அவர்கள் படிப்பு தடை பட கூடாது என்ற  முடிவை எடுத்தேன்'  என தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், 'எங்களது நிலத்தை மாணவர்களுக்கு அளிக்க எனது குடும்பத்தினர் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளித்தனர். இந்த நிலங்களில் அவர்கள் வீடு கட்ட என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் மேற்கொள்வேன். இங்கிருந்து மாணவர்கள் பள்ளிக்கு சென்று நன்றாக படித்து பெரிய நிலைக்கு வர வேண்டும். அதை நான் கண்ணாரக் காண வேண்டும். இதுவே என் ஓய்வுக் கால திட்டம்' என்கிறார் ஆசிரியர் கே.சி.ராஜன் பெருமிதமாக.

KERALA, MASTER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்