'ப்ளீஸ்... நான் வரல.. என்ன விட்ருங்க...!' பிறந்தநாள் கொண்டாட்டம் நடப்பதாகக் கூறி...! ஓடும் காரிலே வைத்து... தேசிய பெண் குழந்தைகள் தினத்தில் நடந்த கொடூர சம்பவம்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஹரியானாவில் பள்ளி மாணவிக்கு மதுவை ஊற்றிக் கொடுத்து பாலியல் வன்கொடுமை அரங்கேற்றப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தேசிய பெண் குழந்தைகள் தினத்தின் போதே, ஹரியானா மாநிலத்தில், ஓடும் காரில் பள்ளி மாணவியை கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்த கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. ஹரியானா மாநிலம் பானிபட் அடுத்துள்ளது மாதிரி நகரம். இப்பகுதியின் பிரதான பூங்கா அமைந்துள்ள பகுதியிலேயே இந்த கொடூர சம்பவம் அரங்கேறி உள்ளது. பாதிக்கப்பட்ட மாணவி, கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில், டியூஷன் வகுப்புக்கு செல்வதாகக் கூறி விட்டு, தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டை விட்டு சென்றுள்ளார்.

ஆனால், அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. இரவு நெடுநேரம் ஆகியும் மாணவி வீடு திரும்பாததால் அச்சமடைந்த பெற்றோர், மாணவியை பல இடங்களிலும் தேடியுள்ளனர். எங்கும் தேடியும் மாணவி கிடைக்காத நிலையில், டி.ஏ.வி. பூங்கா அருகே மாணவியை மயக்க நிலையில், கண்டெடுத்தனர்.

இதனை அடுத்து மாணவியை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் மாணவி அனுமதிக்கப்பட்டார். மயக்கம் தெளிந்த மாணவியிடம் போலீசார் நடத்திய விசாரணையில், பிறந்த நாள் கொண்டாட்டம் நடைபெறுவதாக கூறி அவரது நண்பர்கள், பூங்கா பகுதிக்கு அழைத்துச் சென்றது தெரியவந்தது. முதலில் வரமாட்டேன் என்று சொன்ன மாணவியை கட்டாயப்படுத்தி பூங்காவுக்கு அழைத்துச் சென்றவர்கள், தாங்கள் வைத்திருந்த மதுவை கட்டாயப்படுத்தி அருந்த செய்துள்ளனர்.

இரவு நேரம் என்பதால், மயக்கமடைந்த மாணவியை தங்களது காரில் ஏற்றி, ஓடும் காரில் வைத்தே பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதனை அடுத்து மயக்கமடைந்த நிலையில், ரத்த காயங்களுடன் மாணவியை அந்த கும்பல் பூங்கா அருகே போட்டுவிட்டு சென்றுள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஆஷிஷ் மற்றும் விஷ்ணு ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 4 பேர் இந்த குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள மேலும் இருவரையும் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருவதாக ஹரியானா மாநில அரசு தெரிவித்தாலும், மாநிலத்தில் இதுபோன்ற பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 7 மாதத்தில் மட்டும் 99 புகார்கள் பதிவாகியுள்ளதே இதற்கு சான்றாக உள்ளன.

GANGRAPE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்