அன்புக்கு மொழி எதுக்கு சார்.. பேச்சு மற்றும் செவி மாற்றுத் திறனாளிகளால் இயங்கும் உணவகம்.. நெகிழ வைக்கும் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மகாராஷ்டிர மாநிலத்தில் உணவகம் ஒன்று முழுவதும் பேச்சு மற்றும் செவி மாற்றுத் திறனாளிகளால் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த உணவகத்தின் ஊழியர்கள் வாடிக்கையாளர்களுடன் சைகை மொழியில் பேசி அவர்களுக்கான உணவை அன்போடு பரிமாறும் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | 3 மணி நேர பயணம் இனி 30 நிமிஷம் தான்.. பழனி to கொடைக்கானல்.. ரூ.450 கோடியில் வியக்கவைக்கும் திட்டம்.. முழுவிபரம்..!

சமூகத்தில் தங்களது விடா முயற்சியாலும், தன்னம்பிக்கையாலும் வெற்றியாளர்களாக அறியப்படும் பல மாற்றுத் திறனாளிகளை நாம் பார்த்திருப்போம். அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலத்தின் புனே நகரில் வித்தியாசமான உணவகம் ஒன்று இயங்கிவருகிறது. இங்கே பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் செவி மற்றும் பேச்சு மாற்றுத் திறனாளிகள் தான். இருப்பினும் இந்த ஊழியர்கள் தங்களது உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு அன்புடன் உணவுகளை பரிமாறி வருகின்றனர்.

புனேவின் ஃபெர்குசன் கல்லூரி சாலையில் அமைந்திருக்கிறது டெர்ரசின் - கிச்சன் அண்ட் பார் (Terrasinne - Kitchen and Bar) உணவகம். இங்கு வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் உணவு பட்டியலில் அந்தந்த உணவுகளுக்கான சைகை குறித்த விளக்கமும் இடம்பெற்றுள்ளது. ஆகவே, வாடிக்கையாளர்கள் தங்களுக்கான உணவை எளிமையாக ஆர்டர் செய்துவிட முடிகிறது. அதே நேரத்தில், உணவின் தரம் மற்றும் ருசி குறித்தும் இந்த உணவகத்தின் ஊழியர்கள் விசாரிக்கவும் தவறுவது இல்லை.

பேச்சு மற்றும் செவி மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு அளிப்பது மட்டும் இன்றி, வாடிக்கையாளர்களுக்கு அன்புமிகுந்த சூழ்நிலையையும் உருவாக்கும் நோக்கத்தோடு இந்த உணவகம் செயல்பட்டு வருகிறது. தற்போது சமூக வலை தளங்களில் பரவி வரும் வீடியோவில் உணவகத்திற்குள் நுழையும் வாடிக்கையாளரை அன்புடன் பணியாளர் ஒருவர் வவேற்கிறார். தனது உணவை மெனுவில் இருக்கும் வழிமுறையின்படி அந்த வாடிக்கையாளர் சைகையில் குறிப்பிட, அதனை புரிந்துகொண்ட பணியாளர் உணவை எடுத்துக்கொண்டு வந்து பரிமாறுகிறார்.

அந்த உணவை ருசித்துச் சாப்பிடும் வாடிக்கையாளர், தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்த நன்றி தெரிவிக்கிறார் அந்த பணியாளர். மேலும், இன்னொரு பணியாளர் உணவின் சுவை குறித்தும் சைகை மொழியில் கேட்டறிகிறார். இறுதியில் உணவகத்தின் ஊழியர்கள் கைகளை மேலே உயர்த்தியபடி ஆட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். இந்த உணவகம் லண்டனில் உள்ள International Hospitality Council-லில் இருந்து விருதும் பெற்றிருக்கிறது. இந்நிலையில், இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதுவரையில் இந்த வீடியோவை 5.7 லட்சம் பேர் பார்த்திருக்கின்றனர். நெட்டிசன்கள் இந்த உணவக ஊழியர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

Also Read | காரில் பட்டாசு கொளுத்திய 'ரகடு பாய்ஸ்'.. தொக்கா தூக்குன போலீஸ்.. ரோட்லயே வெச்சு ஸ்பாட் பனிஷ்மென்ட்.. வைரலாகும் வீடியோ..!

RESTAURANT, PUNE, STAFFS, SPEECH AND HEARING IMPAIRED

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்