நண்பா...! 'உன்ன பார்க்க தான் வந்துட்டு இருக்கேன்...' 'திடீர்னு உருவான பயங்கர சத்தம்...' - அதிர்ச்சியில் உறைந்துப்போன பொதுமக்கள்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தன்னுடைய தோழர் ஒருவரை சந்திப்பதற்காக சென்ற காவலர் ஒருவரின் கார் ஒன்று சாலையில் உருவான திடீர் பள்ளத்தில் விழுந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் நேற்று (19-07-2021) காலை முதல் பெய்த கனமழையால் சாலையோரங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால், நகரின் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் தங்களின் அலுவல்களுக்கு செல்ல முடியாமல் தவித்தனர்.

இந்த நிலையில், டெல்லி துவாரகா வழியாக வந்த கார் ஒன்று சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளித்தில் கண் இமைக்கும் நேரத்தில் விழுந்தது. ஆனால், அதிர்ஷ்டவசமாக, இந்த சம்பவத்தில் காரை ஓட்டிய நபருக்கு பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.

டெல்லியை சேர்ந்த காவலரான அஸ்வானி குமார் தன்னுடைய நண்பர் ஒருவரை சந்திப்பதற்காக நேற்று மாலை தன்னுடைய ஐ-10 காரில் சென்றுள்ளார். அப்போது அவர் துவாரகா பகுதியை கடந்த போது, சற்றும் எதிர்பார்க்காத நிலையில் திடீரென்று சாலையின் நடுவே பள்ளம் உருவானதால் காரும் பள்ளத்தில் சிக்கியது. இயல்பாக இருந்த சாலையில் திடீரென சத்தம் கேட்டதால் மக்கள் வந்து குவியத் தொடங்கினர். இந்த விபத்தில் காரை ஓட்டிச்சென்ற காவலர் அஸ்வானி குமாரும் காருக்குள் இருந்தபடியினால் பள்ளத்திற்குள் சிக்கிக் கொண்டார்.

இதனையடுத்து, அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த போக்குவரத்து போலீசார், கிரேன் உதவியுடன் காரை பள்ளத்தில் இருந்து வெளியே கொண்டு வந்தனர். இதில், பெரிதான காயங்கள் எதுவும் இன்றி லேசான காயங்களுடன் அஸ்வானி குமார் நலமாக உள்ளார்.

கண் இமைக்கும் நேரத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்ததால் பொதுமக்கள் அங்கு திரண்டு வந்திருந்தனர். இதனால் அந்த பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்