ஆட்டுக்கு 'மணி' கட்டுறது விட 'மாஸ்க்' கட்டுறது தான் முக்கியம்...! புலிக்கு கொரோனா வந்த உடனே பதறிட்டேன், அதனால்தான்... ஆடுகள் மேல் கரிசனம் காட்டும் நபர்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாதனது பண்ணையில் உள்ள ஆடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவிடக் கூடாது என அணைத்து ஆடுகளுக்கு தெலுங்கானாவை சேர்ந்த ஒருவர் மாஸ்க் காட்டியுள்ளார்.
வொவ்வால்களில் இருந்து எறும்பு தின்னிக்கு பரவிய கொரோனா வைரஸ், சீனாவின் விலங்கு மார்க்கெட் சந்தையிலிருந்து மனிதர்களுக்கு பரவியுள்ளது என ஆய்வுகளில் குறிப்பிடுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள். மேலும் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவி வரும் கொரோனா வைரஸ் உலகெங்கிலும் இதுவரை சுமார் 1,518,783 பேரை பாதித்துள்ளது. இந்த கொடிய வைரசால் இதுவரை 88,505 மக்கள் உயிரிழந்துள்ளனர்.
வல்லரசு நாடுகள் கூட இதன் கோரப்பிடியிலிருந்து தப்பிக்க முடியாமல் மனித உயிர்களை இழந்து வருகிறது. மேலும் அதிர்ச்சியூட்டும் விதமாக, கடந்த வாரம் அமெரிக்காவின் வனவிலங்கு பூங்காவில் பணிபுரியும் ஒரு காவலரிடம் இருந்து, அவர் பராமரித்து வந்த ஒரு புலிக்கும், ஒரு சிங்கத்திற்கு தொற்றியுள்ளது.
தற்போது மனிதர்களிடம் இருந்து விலங்குகளுக்கு பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், உலக வனவிலங்கு மையம் அனைத்து உயிரியல் பூங்காக்களையும் கவனத்துடன் பராமரிக்க வலியுறுத்தியது. இதை அறிந்த தெலுங்கானா மாநிலம் கம்மம் பகுதியில் பண்ணை நடத்திவரும் வெங்கடேஸ்வர ராவ், தனது பண்ணையில் இருக்கும் ஆடுகளுக்கு முகக்கவசம் அணிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது, அமெரிக்காவில் புலிகளுக்கு கொரோனா வைரஸ் பரவியதை கேள்விப்பட்டு பதறிப்போய்விட்டேன். நான் என் ஆடுகளை என் பிள்ளைகள் போல் வளர்த்து வருகிறேன். என் பண்ணையில் 20 ஆடுகள் உள்ளன. இதை நம்பி தான் நாங்கள் குடும்பம் நடத்துகிறோம்.
அதற்கு எந்த நோயும் வர நான் விடமாட்டேன். கொரோனா வைரஸ் மூச்சுக்குழல் மூலம் உடலுக்கு நுழைவதாக டி.வி-யில் சொல்கிறார்கள். அதை தடுக்க மாஸ்க் அணிய வேண்டும் என்றும் விளம்பரங்களில் பார்த்தேன். அதனால் தான், என் ஆடுகளுக்கு மணி கட்டுவதை விட மாஸ்க் அணிவிப்பது முக்கியம் என உணர்ந்து மாஸ்க் காட்டினேன். நானும் வெளியே எங்கு சென்றாலும் மாஸ்க் அணிந்து தான் செல்கிறேன்' என வெங்கடேஸ்வர ராவ் கூறியுள்ளார்
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ரூபாய்' நோட்டில் இவ்வளவு நேரம் 'வைரஸ்' இருக்குமா? 'முகக்கவசத்தை ஏன் தொடக்கூடாது?...' 'விஞ்ஞானிகளின்' புதிய 'ஆய்வு' முடிவுகள்...
- '400 கோடி மாஸ்க்குள்...' '38 லட்சம் பாதுகாப்பு உடைகள்...' '16 ஆயிரம் வென்டிலேட்டர்கள்...' '25 லட்சம் டெஸ்ட் கிட்கள்...' '140 கோடி டாலர் வர்த்தகம்...' 'ஏறுமுகத்தில் சீன பொருளாதாரம்...'
- 'மாஸ்க்' அணிவதால் 'மற்றவர்களுக்கே' அதிக பாதுகாப்பு... நம்மைக் காக்க 'இது' கட்டாயம்... வெள்ளை மாளிகை 'அதிகாரி' தகவல்...
- 'வெரிகுட், இந்த சின்ன வயசுலயே பொறுப்போடு வந்துருக்க...' 'மாஸ்க் போடாம சுத்துறவங்ககிட்ட நீ தான் சொல்லணும்...' விழிப்புணர்வோடு சைக்கிளில் வந்த சிறுவன்...!
- 'உலக சுகாதார மையத்தையே அதிரச் செய்த மாஸ்க்...' 'அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு சவால்...' "இதைதாண்டி கொரோனா உள்ள போயிடுமா?..." 'யாருகிட்ட...!'
- 'மாஸ்க் வாங்க எங்களுக்கு வசதி இல்ல...' 'நாங்க ரெண்டு பேரும் இதத்தான் போட்டுக்குறோம்...' பனை ஓலையில் மாஸ்க் செய்து அணிந்த ஏழை விவசாயி...!
- 'முகக்கவசம் இருந்தாலும் இப்படி கூட வைரஸ் பரவலாம்' ... மருத்துவ நிபுணர்கள் எச்சரிப்பது என்ன?
- ஒற்றை ‘கிருமி’ உலகம் முழுவதும் ‘பரவும்’... முன்பே ‘கணித்த’ மைக்கேல் ஜாக்சன்... ‘ரகசியத்தை’ பகிர்ந்த ‘பாடிகார்டு’...
- 'மாஸ்க் அணிந்து... மணம் முடித்த தம்பதி!'... கொரோனாவை அலறவிட்ட திருமணம்!
- ‘கள்ளச்சந்தையில் 1 லட்சம் காஸ்ட்லி மாஸ்க்!’.. ‘அறுவை சிகிச்சைக்கு ஏற்பட்ட பற்றாக்குறை’.. கொரோனாவை பயன்படுத்தி உறையவைத்த 3 பேர்!