'நான் கொரோனா வார்டுல வொர்க் பண்ணல...' 'டாக்டரை டார்ச்சர் பண்ணின பக்கத்துக்கு வீட்டுக்காரர்...' வைரலாகும் வீடியோ...!
முகப்பு > செய்திகள் > இந்தியாமருத்துவமனையில் பணிபுரியும் பெண் மருத்துவரை கொரோனா தொற்று உள்ளது எனக் கூறி பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் துன்புறுத்தும் வீடியோ வெளிவந்ததை அடுத்து தேசிய பெண்கள் ஆணையம் விசாரணை நடத்த அறிவுறுத்தி உள்ளது.
தற்போது இந்தியாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் அனைத்து தள மக்களையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
டாக்டர் சஞ்சீவனி என்பவர் குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நகரில் இருக்கும் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இவரது மருத்துவமனையிலும் கொரோனா வைரஸ் தொற்று பாதித்த நோயாளிகளுக்கு தனிப்பிரிவு அமைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் டாக்டர் சஞ்சீவனி அவர்கள் வசிக்கும் அபார்ட்மென்ட்டில் இருக்கும் மற்றொரு தம்பதியினர், சஞ்சீவனி மருத்துவமனையில் இருந்து வருவதால் இங்கு இருக்கும் நமக்கும் கொரோனா வைரஸை பரவி விடப்போகிறார் என்று கூறி தகாத வார்த்தைகளால் டாக்டர் சஞ்சீவனியை திட்டியுள்ளார். தான் கொரோனா பிரிவில் பணிபுரியவில்லை என எவ்வளவோ சொல்லியும் கேட்காத அத்தம்பதியினர் மேலும் மேலும் டாக்டர் சஞ்சீவனியை துன்புறுத்தி உள்ளனர். இந்த சம்பவம் குறித்தான வீடியோ சமூகவலைத்தளங்களில் பரவி வைரல் ஆகியுள்ளது.
வெளிவந்த இந்த வீடியோவை அடுத்து தேசிய பெண்கள் ஆணையம் குஜராத் போலீசாருக்கு பெண் மருத்துவரை துன்புறுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து முழுமையான விசாரணை நடத்துமாறு அறிவுறுத்தியுள்ளது. மேலும் தேசிய பெண்கள் ஆணையம் இந்த சம்பவம் குறித்து விசாரிக்க குஜராத்தின் காவல் ஆணையர் சிவானந்த் ஐ.பி.எஸ். கடிதம் எழுதியுள்ளனர்.
தேசிய பெண்கள் ஆணையம் எழுதிய கடிதத்தில் 'அரசு மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் சஞ்சீவனிக்கு உரிய பாதுகாப்பு அளிக்கவும், நடந்த இந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணை மேற்கொள்ளவேண்டும் எனவும் கூறியுள்ளனர். அதுமட்டும் இல்லாமல் விசாரணை அறிக்கையானது பெண்கள் உரிமை அமைப்பிற்கு அனுப்பவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. கொரோனா வைரஸின் மீதிருந்த அச்சத்தால் ஒரு சிலர் எந்த வித விழிப்புணர்வும் இல்லாமல் இம்மாதிரியான செயல்களில் ஈடுபடுவது பெருகிவருவதாக சமூகவலைத்தளங்களில் ஒரு சிலர் குறிப்பிடு வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க, என் குழந்தை தவிச்சுக்கிட்டு இருக்கும்...' 'பணத்துக்கு நான் எங்க போவேன், சிங்கிள் டீ வாங்கக்கூட...' மருத்துவர் செய்த நெகிழ்ச்சி காரியம்...!
- 'சென்னை டாக்டருக்கு கொரோனா...' 'விமான நிலைய பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்தவர்...' தொடர்பில் இருந்தவர்களை கண்காணிக்கும் சுகாதாரத்துறை...!
- 'வீட்டு வாசல்ல நின்னு தான் என் குழந்தைய பார்த்தேன்!'... கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க... 2 வாரங்களாக குடும்பத்தை பிரிந்த மருத்துவர்!... மனதை உருக்கும் நெகிழ்ச்சி சம்பவம்!
- 'எனக்கு கல்யாணம் முக்கியம் இல்ல...' 'இன்னொரு தேதியில கூட பண்ணிக்கலாம், ஆனால்...' பெண் மருத்துவரின் தன்னலமற்ற அறம்...!
- எய்ம்ஸ் மருத்துவருக்கு கொரோனா உறுதி!... 'கான்டாக்ட் ட்ரேசிங்'கை தீவிரப்படுத்திய நிர்வாகம்!... டெல்லியில் பரபரப்பு!
- ‘டெல்லி மாநாட்டை அட்டென்ட் பண்ணிட்டு.. அசால்டாக மருத்துவம் பார்த்துவந்த தமிழ்நாடு டாக்டர்!’.. கொரோனா பரிசோதனைக்காக அழைத்துச் சென்ற சுகாதாரத்துறை!
- கோவையில் '10 மாத குழந்தைக்கு கொரோனா வந்தது எப்படி?'... அதிர்ச்சியூட்டும் பின்னணி!
- 'சவுதியில் இருந்து இந்தியா வந்த பெண்ணுக்கு... கொரோனா பரிசோதனை செய்த மருத்துவர்!'... குடும்பத்துக்கே நேர்ந்த கொடுமை!... கல் நெஞ்சையும் கரைய வைக்கும் துயரம்!
- '50 மணி நேரம்...' '2,500 கிலோமீட்டர்...' '5 மாநிலங்களைக் கடந்து...' ஆச்சரியமூட்டும் 'சாகசப் பயணம்...' 'மகளை' மீட்ட 'தந்தையின்' பாசப் 'போராட்டம்'...
- ‘அப்பவே அவரு சொன்னதை கேட்டிருந்தால்’... ‘கொரோனா குறித்து எச்சரித்த இளம் மருத்துவரிடம்’... ‘இறுதியாக சீன அரசு எடுத்த முடிவு’!