பெற்றெடுத்த 5 குழந்தைகளையும் ஒரே நேரத்தில் ஆற்றில் வீசியயெறிந்த தாய்!... கங்கை நதியில் அரங்கேறிய கொடூரம்!... பதபதைக்க வைக்கும் கோரம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கணவருடன் ஏற்பட்ட தகராறில் கல்நெஞ்ச தாய் ஐந்து குழந்தைகளை கங்கையில் தூக்கி வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் படோஹியில் உள்ள கிராமம் ஜஹாங்கிரபாத். இங்கு மிரிதுல் யாதவ் - மஞ்சு தம்பதி வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு ஆர்த்தி, சரஸ்வதி, மாதேஸ்வரி, ஷிவ்சங்கர், கேஷவ் பிரசாத் என ஐந்து குழந்தைகள் இருந்தனர்.

கணவன் - மனைவிக்கு இடையே கடந்த ஒருவருடமாக தொடர்ந்து கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. இந்நிலையில், நேற்றிரவு கருத்து வேறுபாடு அதிகரித்து கைகலப்பாக மாறியுள்ளது. இதனால் மஞ்சு தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு, தான் பெற்ற குழந்தைகள் என்றும் பாராமல் ஜஹாங்கிரபாத் காட் பகுதியில் உள்ள கங்கை நதியில் தூக்கி எறிந்துள்ளார்.

அதைத் தொடர்ந்து, அவரும் ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆனால், சிறிது நேரத்திலேயே தன்னுடைய முடிவை மாற்றிக்கொண்டு கரை திரும்பிவிட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்துக்கு வந்து குழந்தைகளை காப்பாற்ற முயற்சி செய்தனர். ஆனால், குழந்தைகளை கண்டெடுக்கமுடியவில்லை. இதற்கிடையே, பெற்ற குழைந்தகளை தாய் ஆற்றில் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், குழந்தைகளை ஆற்றில் வீச முயன்றபோது அங்குள்ள மீனவர்கள் பார்த்துள்ளனர். ஆனால் சூனியக்காரி என்று பயந்து குழந்தைகளை காப்பாற்றாமல் ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, அந்த பெண் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று சில கிராம மக்கள் தெரிவித்தனர். ஆனால், அவரின் கணவரோ தன்னுடைய மனைவி நல்ல மனநிலையோடு தான் இருந்தார் என்றும், அவர் ஏன் இப்படியொரு முடிவை எடுத்தார் என புரியவைல்லை என்றும் கூறியுள்ளார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்