நான் வேணும்னே என் குழந்தையை கொல்லல சார்...! 'ப்ளீஸ் என்ன நம்புங்க...' என்ன காரணம் தெரியுமா...? பதற வைக்கும் அதிர்ச்சி சம்பவம்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

உத்தரப் பிரதேசத்தின் அலிகார் மாவட்டத்தில் 6 மாத பெண் குழந்தையை அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நான் வேணும்னே என் குழந்தையை கொல்லல சார்...! 'ப்ளீஸ் என்ன நம்புங்க...' என்ன காரணம் தெரியுமா...? பதற வைக்கும் அதிர்ச்சி சம்பவம்...!

அலிகார் மாவட்டத்தின் ராம்பூர் கிராமத்தில் வசித்து வருபவர் பிங்கி - ராகுல் தம்பதி. இவருக்கும் 6 மாத பெண் குழந்தையும், 3 வயது மகனும் உள்ளனர். இந்நிலையில் கணவருடனான சண்டையில் மகள் சோனியை அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் ஞாயிற்றுக்கிழமை அன்று நிகழ்ந்துள்ளது.

புதுத்துணி வாங்க கடைக்கு செல்வது குறித்து பிங்கி சர்மாவுக்கும் அவரது கணவர் ராகுலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. சண்டை தீவிரமடைந்து இருவரிடைய வாக்குவாதம் முற்றியதில் 6 மாத பெண்குழந்தையைக் கோபத்துடன் தூக்கி வீசியுள்ளார் தாய் பிங்கி.

இதில் பலத்த காயமடைந்த மகள் சோனி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், இச்சம்பவம் குறித்து காணவர் ராகுல் அளித்த புகாரின் பேரில் பிங்கி மீது ஐபிசி பிரிவு 302 கொலை வழக்கின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

இதுகுறித்து பிங்கி கூறுகையில் "என் குழந்தையை நான் வேண்டுமென்றே கொல்லவில்லை, கணவருடனான சண்டையில் தன்னிலை இழந்து என்னை அறியாமல் இப்படிச் செய்துவிட்டேன், என்னை நம்புங்கள்" என்று பிங்கி அழுதுக்கொண்டே போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அக்கம் பக்கத்திலுள்ள மக்களை பெரும் அதிர்ச்சியில்  ஆழ்த்தியுள்ளது.

MOTHERDAUGHTER

மற்ற செய்திகள்