'கொரோனாவை' வென்ற 'கேரள' மாணவி... 10 நாள் சிகிசையில் 'பூரண குணம்'... 'வைரஸ்' பீதியிலிருந்து 'விடுதலை'...
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரளாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மருத்துவ மாணவியின் உடல் தற்போது சீராக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகின் பல்வேறு நாடுகளுக்கு பரவியதையடுத்து, இந்தியாவிலும் தன் கால்தடத்தை பதித்துள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அதன் பாதிப்பு இருந்தாலும், கேரளாவில் அதிகமாக உள்ளது.
கடந்த 30ஆம் தேதி வுகான் நகரில் படித்து வந்த கேரளாவைச் சேர்ந்த மருத்துவ மாணவி நாடு திரும்பினார். அவருக்கு சோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், அவருக்கு கடந்த 10 நாட்களாக திருச்சூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தற்போது அவருடைய உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கடைசியாக எடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனையில் முடிவுகள் நெகடிவ் என வந்துள்ளன.
மீண்டும் ஒருமுறை எடுக்கப்படும் சோதனையிலும் இதே முடிவு வந்தால் அந்த மாணவி பூரணமாகக் குணமடைந்துவிட்டார் என்று அறிவிக்கப்பட்டு அவர் மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு அனுப்பப்படுவார். திருச்சூரைச் சேர்ந்த மாவட்ட மருத்துவ அதிகாரிகளும் மாணவியின் உடல்நிலை சீராக இருப்பதை உறுதி செய்துள்ளனர். இந்தச் செய்தியால் கேரள மக்கள் மட்டுமல்லாது மொத்த இந்திய மக்களும் நிம்மதி பெருமூச்சுவிட்டுள்ளனர்.
கொரோனா தொற்று ஏற்பட்டால் மரணம் உறுதி என்ற மக்களின் மனிநிலையில் இந்த சம்பவம் மாற்றத்தை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது. கொரோனா வைரஸ் அதிகபட்சம் 9 நாட்கள் மட்டுமே உயிரோடு இருக்கும் என்பதால் 10 நாள் சிகிச்சையில் பூரண குணமடைந்து விடலாம் என அண்மையில் வெளியான ஆய்வுத் தகவல்கள் தெரிவித்துள்ளன. இதன் மூலம் காய்ச்சலைக் குறைத்து ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொண்டால் வைரஸ் தாக்குதலிலிருந்து முற்றிலும் குணமடைய முடியும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- தானாக முன்வந்து ‘பரிசோதித்து’ கொண்டால் ‘பரிசு’... நாளுக்கு நாள் ‘அதிகரிக்கும்’ பலி எண்ணிக்கை... ‘தீவிர’ நடவடிக்கையில் இறங்கிய அரசு...
- 'வாங்குன கடன் 15 லட்சம்'... 'ஆனா கையில இப்போ 60 லட்சம்'... வாரி அணைத்து கொண்ட அதிர்ஷ்ட தேவதை!
- "சீன அதிபர் 'ஜி ஜின்பிங்' எங்கே?..." "என்ன ஆனார்...?" "ரகசிய இடத்தில் தஞ்சமா...? கோபத்தில் கொந்தளிக்கும் 'சீன' மக்கள்...
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...!
- '9 நாட்கள்' தாக்கு பிடித்தால் போதும்... 'கொரோனா' தானாகவே மடிந்து விடும்... 'வைரஸ்' குறித்த ஆராய்ச்சியாளர்களின் வியக்க வைக்கும் முடிவுகள்...
- 'கண்ணாடி' தடுப்புகளிடையே பறிமாறிக் கொண்ட 'அன்பு'... 'கொரோனா' மத்தியில் நெகிழ வைக்கும் 'காதல்' காட்சி...''வைரல் வீடியோ'...
- கடைசியில் எறும்புத் தின்னிதான் காரணமா? பாம்பு, வௌவால் எல்லாம் அப்புறம் தானா... சீன விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு...
- "வாந்தி எடுத்தது ஒரு குத்தமாய்யா..." 'விமானத்தை' 3 மணி நேரமாக கழுவிய ஊழியர்கள்... 'கொரோனா' பீதியில் சக 'பயணிகள்'...
- 'வந்துட்டோம்னு சொல்லு... கொரோனாவ ஒழிக்க வந்துட்டோம்னு சொல்லு'... 'கொரோனாவை ஒழிக்கும் தடுப்பூசி ஆராய்ச்சி... தலைமையேற்ற இந்திய விஞ்ஞானி!
- 10 நாட்களாக தூங்காமல் உழைத்த 'சீன மருத்துவர்'... திடீரென எதிர்பாராமல் நேர்ந்த துயரம்... 'ரியல் ஹீரோவுக்கு' சல்யூட் அடித்த சீன மக்கள்...