'73 வயதில் மாப்பிள்ளை தேடும் பாட்டி'... 'ஸ்ட்ரிக்ட்டா போட்டுள்ள கண்டிஷன்கள்'... மாப்பிள்ளை தேடுவதற்கு பின்னணியில் உள்ள உருக்கமான காரணம்!
முகப்பு > செய்திகள் > இந்தியா73 வயதில் மாப்பிள்ளை தேவை என மூதாட்டி ஒருவர் கொடுத்துள்ள விளம்பரம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கர்நாடக மாநிலம் மைசூரைச் சேர்ந்த 73 வயது மூதாட்டி ஒருவர் அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது பெற்றோரும் இறந்து விட்ட நிலையில் தனிமையில் வாழ்ந்து வருகிறார். வயது முதிர்ந்த நிலையில், தனிமையில் இருக்கும் அவர், தற்போது மறுமணம் செய்ய முடிவு செய்து அதற்கான விளம்பரத்தையும் கொடுத்துள்ளார். விருப்பமுள்ள 73 வயதுக்கு மேற்பட்ட திடகாத்திரமான ஆண் மகன் தன்னை தொடர்பு கொள்ளலாம் என விளம்பரம் செய்துள்ளார்.
இதற்காக அவர் சில நிபந்தனைகளையும் விதித்துள்ளார். அதன்படி, ''அந்த நபர் 73 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். தான் பிராமண வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் அந்த நபரும் பிராமண வகுப்பைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்'' எனக் கூறியுள்ளார். இதற்கிடையே தனது மறுமணத்திற்குப் பின்னால் இருக்கும் உருக்கமான காரணத்தை அவர் தெரிவித்துள்ளார்.
அதில், ''எனக்கு 13 வயதில் திருமணம் நடந்தது. ஆனால் அந்த திருமணம் சில ஆண்டுகளிலேயே முடிவுக்கு வந்து விட்டது. எனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்ற பின்னர் எனது பெற்றோரிடம் வசித்து வந்தேன். நான் நன்றாகப் படித்ததால் எனக்கு அரசு வேலையும் கிடைத்தது. எனது பெற்றோரை நான் நன்றாகக் கவனித்துக் கொண்டேன். ஆசை ஆசையாகச் சொந்த வீடு ஒன்றும் வாங்கினேன்.
ஆனால் தற்போது எனது பெற்றோர் உயிருடன் இல்லை. நான் ஆசை ஆசையாக வாங்கிய அந்த பெரிய வீட்டில் தற்போது தனிமையில் தான் இருக்கிறேன். தனிமை என்னை மிகவும் வாட்டுகிறது. இதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். இதன் காரணமாகவே நான் மறுமணம் செய்ய திட்டமிட்டுள்ளேன்.
பல இந்த வயதில் உனக்குத் திருமணம் வேண்டுமா எனக் கேட்கிறார்கள். ஆனால் ஒரு துணை இல்லாமல் தனிமையில் இருப்பது மிகப்பெரிய தண்டனை என உருக்கமாக'' தெரிவித்துள்ளார். இணையத்தில் திருமண விளம்பரத்தைப் பார்த்துவிட்டு பலர் கிண்டலாகப் பதிவிட்டு வந்த நிலையில், ''மரணத்தை விடத் தனிமை என்பது மிகப்பெரிய கொடுமை. எனவே அந்த மூதாட்டியின் உணர்வைக் கொச்சைப் படுத்தாதீர்கள்'' எனப் பலரும் தெரிவித்து வருகிறார்கள்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- '40 வருட தாம்பத்தியம்'... 'கதறி அழுத அடுத்த நொடி நடந்த சோகம்'... 'இப்படி ஒரு கணவன் மனைவியா'?... நெகிழவைத்த அன்யோன்யம்!
- ‘இப்படியொரு வரவேற்பு கிடைக்கும்னு நினைக்கவே இல்ல’!.. வைரலாகும் காதல் ஜோடியின் நிச்சயதார்த்த மோதிரம்..!
- ‘யாருமே முன்வரல’!.. கல்யாணம் முடிஞ்ச கையோடு செஞ்ச ‘முதல்’ காரியம்.. புதுமண ஜோடிக்கு குவியும் வாழ்த்து..!
- 'லவ் பண்றப்போ...' 'எனக்கு ஏதாவது ஒண்ணுன்னா விட்டுட்டு போய்டுவியான்னு கேட்பார்...' 'அவர் எப்படி இருந்தாலும் என் காதல் குறையாது...' - கண்கலங்க வைக்கும் காதல்...!
- "'திருமணம்' முடிஞ்ச கையோட.. முதல் 'விசிட்' இங்க தான்..." 'சபாஷ்' போட வைத்த புது 'ஜோடி'... குவியும் 'பாராட்டு'!!
- ‘நாங்க இப்படிதான் கல்யாணம் பண்ண ஆசை படுறோம்’.. கிரீன் சிக்னல் கொடுத்த பெற்றோர்.. ஜோடிக்கு குவியும் வாழ்த்து..!
- ‘உங்க கற்பனைக்கு ஒரு எல்லையே இல்லையா..!’ ஒரு நொடி அதிர்ச்சியில் உறைய வச்ச ‘காதல் ஜோடி’-ன் போட்டோ.. கடைசியில் தெரியவந்த உண்மை..!
- 'கொரோனா தடுப்பூசியை பெறுவதற்காக'.. ஹோட்டல் ஊழியர்களாக மாறி ‘கோடீஸ்வர கணவரும் நடிகையும்’.. செய்த மோசடி அம்பலம்! அடுத்த நடந்த ‘அதிரவைக்கும் சம்பவம்!’
- 'என்னங்க, வயிறு வலிக்க ஆரம்பிச்சிடுச்சு'... 'மருத்துவமனைக்கு விரைந்த தம்பதி'... 'அங்க இப்படி ஒரு ஆச்சரியமா'?... குதூகலத்தில் இளம் தம்பதி!
- 'எந்த வரனும் அமையல'... 'அந்த நேரம் பார்த்து மலர்ந்த காதல்'... 'காதலர்களை சூழ்ந்த எதிர்ப்பு'... சாதித்த காதல் ஜோடி!