'வீட்டை தேடி வந்த பார்சல்'.... 'திறந்த பார்சலை கண்டு ஓட்டம் பிடித்த இளைஞர்'... அதிர்ச்சி வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கூரியர் பார்சலை திறந்து பார்த்தபோது அதில் இருந்து விஷ பாம்பு வெளியே வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் விஜயவாடா பகுதியைச் சேர்ந்த முத்துக்குமரன் என்பவர் தனது வேலை காரணமாக ஒடிசாவில் மயூர்பன்ச் மாவட்டத்தில் ராஜரங்பூர் பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு சமீபத்தில் பார்சல் ஒன்று வந்துள்ளது. இது ஆந்திர மாநிலம் குண்டூரில் இருந்து வந்தது. பார்சலை வாங்கிக் கொண்டு, அதை ஆர்வத்துடன் முத்துக்குமரன் திறந்து பார்த்தார்.

அதில் வீட்டு உபயோகப் பொருட்கள் இருந்துள்ளன. ஒவ்வொரு பொருட்களாக முத்துக்குமரன் வெளியே எடுத்து வைக்க, திடீரென 4 அடி நீளமுள்ள விஷப் பாம்பு ஒன்று வெளியேறியதைக் கண்ட முத்துக்குமரன் அதிர்ச்சியில் ஓட்டம் பிடித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரிகள், விஷப் பாம்பை லாவகமாக பிடித்துச் சென்று வனப்பகுதிக்குள் விட்டனர்.

முத்துக்குமரன் தனது வீட்டுக்குத் தேவையான பொருட்கள் சிலவற்றை டெலிவரி செய்ய, குண்டூரில் கடந்த 9-ம் தேதி தனியார் கூரியர் நிறுவனத்தில் பதிவு செய்துள்ளார். அதன்படி கூரியரில் வந்த பார்சலை திறந்து பார்க்கும் போது அதில் பொருட்களுடன் இருந்த பாம்பைப் பார்த்து அதிர்ச்சியடைந்ததாக கூறியுள்ளார்.

ODISHA, COBRA SNAKE, COURIER PARCEL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்