'135 கி.மீ.,' உணவின்றி நடந்தே சென்ற 'கூலித் தொழிலாளி...' 'ஊரடங்கு' உத்தரவு காரணமாக.... 'போக்குவரத்து' முடக்கப்பட்டதால் 'நேர்ந்த பரிதாபம்'...

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பேருந்து போக்குவரத்து முடக்கப்பட்டதால் மஹாராஷ்டிராவில் 26 வயது கூலித் தொழிலாளி ஒருவர் தனது சொந்த ஊர் செல்வதற்காக உணவின்றி 135 கி.மீ தூரம் நடந்தே சென்றுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய போக்குவரத்து தவிர அனைத்து போக்குவரத்தும் முற்றிலும் தடைப்பட்டுள்ளன.

இதன் காரணமாக சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் பலரும் தவித்து வருகின்றனர். சிலர் ஊரடங்கு அமலுக்கு முன்பாக கிடைத்த பேருந்தில் கூட்டம் கூட்டமாக கிளம்பினர். சிலர் நடந்தே சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர்.

புனேவில் கூலித் தொழிலாளியாக பணிபுரியும் நரேந்திர செல்கே என்பவர் தனது சொந்த ஊரான சந்திராபூருக்கு நடந்தே சென்றுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

அவர், புனேவில் இருந்து நாக்பூர் செல்லும் கடைசி ரயிலை பிடிக்க திட்டமிட்டுள்ளார். ஆனால் நாடு முழுவதும் ஊரடங்கு அமலானதால், அவர் நாக்பூரிலே சிக்கித் தவித்துள்ளார். சொந்த ஊர் செல்ல வேறு எந்த வழியும் இல்லாததால், நடந்தே செல்ல முடிவெடுத்து, கடந்த 24ம் தேதி சந்திராபூருக்கு நடைப்பயணத்தை தொடங்கினார். இரண்டு நாட்களாக எந்த உணவும் இல்லாமல் நடந்து சென்ற அவர், தண்ணீரை மட்டும் அருந்தியுள்ளார். இதையடுத்து, 25ம் தேதி, இரவு சிவாஜி சதுக்கம் அருகே சென்றுக்கொண்டிருக்கும் போது, ரோந்து சென்ற போலீசார் நரேந்திர செல்கேவை தடுத்து நிறுத்தினர்.

போலீசாரிடம் தனது நிலைமையை எடுத்துக்கூறிய செல்கேவை மருத்துவமனையில் சேர்த்து பரிசோதனை செய்தனர். இதையடுத்து, போலீசார் அவருக்கு உணவு வழங்கியுள்ளனர். மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு அவரை போலீஸ் வாகனத்திலேயே 25 கி.மீ., தொலைவில் உள்ள அவரது ஊருக்கு அழைத்து சென்றனர்.

CORONA, CURFEW, MAHARASHTRA, RAJASTHAN, LABOUR, HOMETOWN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்