எனக்கு 'coding' ரொம்ப புடிக்கும்...! 'அந்த ஒரு' வார்த்தைக்காக பெரிய கம்பெனிகள் வெயிட் பண்ணிட்டு இருந்தாங்க...' - வந்த எல்லார விடவும் 'சேலரி பேக்கேஜ்' இவங்களுக்கு தான் அதிகமாம்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவை சேர்ந்த பெண் ஒருவர் அமெரிக்காவில் ஆண்டுக்கு ரூ.2 கோடி சம்பளத்துடன் கூடிய வேலையை பெற்று தலைப்பு செய்திகளில் இடம் பிடித்துள்ளார்.
ஐதராபாத்தை சேர்ந்த தீப்தி நர்குட்டி (Deepthi Narkuti) என்ற இளம்பெண் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறார். ஐதராபாத்தைச் சேர்ந்த தீப்தி, உஸ்மானியா பொறியியல் கல்லூரியில் தனது பொறியில் படிப்பை முடித்துள்ளார்.
இவரின் தந்தை டாக்டர் வெங்கண்ணா ஐதராபாத்தில் தடயவியல் நிபுணராக பணியாற்றுகிறார்.
இந்நிலையில் தீப்தி அமெரிக்காவில் அண்மையில் நடத்தப்பட்ட நேர்காணலில் (campus interview) தனது திறமையை நிரூபித்து வைரலாகி உள்ளார்.
இளநிலை படிப்பை இந்தியாவில் படித்த தீப்தி, தனது முதுநிலை படிப்பைத் தொடர அமெரிக்காவில் தொடர திட்டமிட்டார். அதற்கு பொருளாதார ரீதியாக உதவி தேவைப்படவே அமெரிக்காவுக்குச் செல்வதற்கு முன்பு JPMorgan Chase நிறுவனத்தில் சாஃப்ட்வேர் இன்ஜினியராக 3 ஆண்டுகள் பணியாற்றினார்.
அதன்பின் தனது விடா முயற்சியால் ஃப்ளோரிடா பல்கலைக்கழகத்தில் ஸ்காலர்ஷிப் பெற்ற அவர் சமீபத்தில் தான் அந்த பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸில் முதுகலை பட்டம் பெற்றார்.
இந்நிலையில் கேம்பஸ் இன்டர்வியூ மூலம் மிக பெரிய நிறுவனங்களான அமேசான், கோல்ட்மேன் மற்றும் சாச்ஸ் (Sachs)ஆகியவை எல்லாம் தீப்தியின் சரி என்ற வார்த்தைக்காக காத்திருந்தன.
யோசனைக்கு பின் தீப்தி மைக்ரோசாஃப்ட் நிறுவன வேலையே தேர்வு செய்துள்ளார். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் மென்பொருள் மேம்பாட்டு பொறியாளர் கிரேட் -2 குரூப் (software development engineer grade-2 group) போஸ்ட்டிற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள தீப்திக்கு அந்நிறுவனம் ஆண்டுக்கு ரூ.2 கோடி சம்பளத்தை நிர்ணயித்துள்ளது.
தீப்தி தற்போது தனது திறமையால் வைரல் ஆகியுள்ள நிலையில், ஃப்ளோரிடா பல்கலைக்கழகத்தில் நடந்த வளாக நேர்காணலின் போது அதில் பங்கேற்ற சுமார் 300 மாணவர்களில், மிக உயர்ந்த வருடாந்திர சேலரி பேக்கேஜை தீப்தி மட்டுமே பெற்று புகழடைந்துள்ளார்.
இதுகுறித்து கூறிய தீப்தி, 'எனக்கு கோடிங் ரொம்ப பிடிக்கும். எனக்கு பிடித்தத்தை படிக்கவேதான் இந்த அளவு நல்ல நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளேன். எதிர்காலத்தில் அன்றாட பிரச்சனைகளை தீர்க்க மற்றும் வாழ்க்கையை மாற்றுவதில் தொழில்நுட்பம் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தி உதவும்' என தீப்தி உறுதியாக நம்புகிறார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘முடிவுக்கு வந்த 27 ஆண்டுகால தாம்பத்திய வாழ்க்கை’!.. விவாகரத்தை அறிவித்தார் பில் கேட்ஸ்.. அதிர்ச்சியை ஏற்படுத்திய ‘ட்விட்டர்’ பதிவு..!
- புரியுது...! 'ரொம்ப மன உளைச்சலா இருப்பீங்க...' 'அதனால ஒரு பரிசு கொடுக்க போறோம்...' - வேற லெவல் ஆஃபர் அளித்த பிரபல ஐடி நிறுவனம்...!
- 'என்னையே வேலைய விட்டு தூக்கிட்டீங்கல...' 'என்ன பண்றேன்னு மட்டும் பாருங்க...' 'பல மாசமா ராத்திரி பகலா திட்டம் போட்டு...' - பிரபல நிறுவனத்தை பழிவாங்க செய்த அதிர்ச்சி காரியம்...!
- ‘ஒரு மிஸ்டேக் இருக்கு’!.. மைக்ரோசாப்ட்டை அலெர்ட் பண்ணிய ‘சென்னை’ இன்ஜினீயர்.. அடித்த ‘ஜாக்பாட்’!
- 'அவங்க எப்படி இத பண்ணலாம்?'.. ரஷ்யா, வடகொரியாவை... கடுமையாக சாடிய மைக்ரோசாப்ட் நிறுவனம்!.. வெளியான அதிர்ச்சி தகவல்!
- “ஊழியர்களுக்கு இதுதான் விருப்பம்னா.. கண்டிப்பா பண்ணுங்க!” - ‘உலக லெவல்’ சாஃப்ட்வேர் நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு!
- VIDEO: 'ஒவ்வொரு நாளும் உங்களை மிஸ் பண்ணுவேன் அப்பா!'.. பில் கேட்ஸின் தந்தை மரணம்!.. உருக்கமான கடிதம் எழுதி... பில் கேட்ஸின் கண்கலங்க வைக்கும் பாசப் போராட்டம்!
- அமெரிக்காவின் பிரபல நிறுவனத்துக்கு கைமாறும் ‘TikTok’.. கெடு விதித்த கடைசி நாளில் நடந்த ‘டீலிங்’..!
- 'ஆஹா... ஒன்னு கூடிட்டாங்கய்யா!.. இது எங்க போய் முடியப்போகுதோ'!?.. அமெரிக்காவில் டிக்டாக்-ஐ வாங்க புதிய கூட்டணி!.. இந்த நிலைக்கு வர 'இது' தான் காரணம்!
- 'சம்பளம் மட்டுமில்ல...' அதை தாண்டி இவ்வளவு மேட்டர் இருக்கா...! - 'மைக்ரோசாப்ட் கம்பெனியில work பண்ண ஆசைப்படுறதுக்கான அல்டிமேட் காரணங்கள்...!