நான் மனுஷங்க மேல 'கம்ப்ளைன்ட்' கொடுக்க வரல சார்...! 'நாலு பசுமாடுகளை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்த விவசாயி...' - 'புகாரை' கேட்டு ஆடிப்போன போலீசார்..!.
முகப்பு > செய்திகள் > இந்தியாவிவசாயி ஒருவர் என் மாட்டுக்கு பால் கறக்க அறிவுரை சொல்லுங்க என மாடுகளோடு காவல்நிலையத்தை முற்றுகையிட்ட சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பொதுவாக காவல் நிலையத்திற்கு நகை, பணம் காணவில்லை, அடித்தடி சண்டை, காதலர்கள், பெற்றோர்கள் சண்டை என நியாயம் கேட்டு செல்லும் நிலையில் விவசாயி ஒருவர் மாடுகள் மீது புகார் அளிக்க சென்றுள்ளார்.
கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி தாலுகா ஒலேஒன்னூர் அருகே இருக்கும் சிட்லிபுரா என்ற குக்கிராமத்தில் வசிப்பவர் ராமைய்யா. விவசாயியான இவர் விவசாயம் செய்தும், தன் பண்ணையில் இருக்கும் 4 பசு மாடுகளை வைத்து பால் கறந்தும் பிழைப்பு நடத்தி வருகிறார்.
இந்நிலையில் தற்போது இவரின் பசு மாடுகள் ராமைய்யா பால் கறக்க முயற்சி செய்தால், பால் சுரக்கவில்லை எனவும் அதையும் மீறி அவர் பால் கறக்க முயன்றால், மாடுகள் அவரை காலால் எட்டி உதைத்து வருகிறதாம்.
இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் ராமைய்யாவின் மனைவி ரத்னம்மா பால் கறந்தால் மாடுகள் எதுவும் செய்வதில்லையாம். இது ஒரு நாள் இரண்டு நாள் இல்லை ஒரு வாரமாக இதே கூத்துதானம்.
மாடுகளிடம் இடி வாங்கினாலும் ராமைய்யா தொடர்ந்து பால் கறக்க முயற்சி செய்து வருகிறாராம். ஆனால் மாடுகளும் எப்போதும் போல அவரை பால் கறக்கவிடுவதில்லையாம். இந்நிலையில் மாடுகளின் செயல் குறித்து விரக்தியடைந்த ராமைய்யா நேற்று மாடுகள் மீது போலீசில் புகார் அளிக்க முடிவு செய்து காவல் நிலையம் சென்றுள்ளார்.
காவல் நிலையத்திற்கு கூடவே தன்னை எட்டி உதைக்கும் மாடுகளையும் அழைத்து சென்றுள்ளார். காவல் நிலையத்தில் ராமைய்யாவையும், மாடுகளையும் பார்த்த போலீசார் ஏதோ வயலில் வில்லங்கம் ஏற்பட்டுள்ளது என நினைத்து விசாரிக்கையில் தான் போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
'மாடுகளை பால் கறக்க தானே வாங்குனேன், என்ன எட்டி எட்டி உதைக்குறாங்க. மாடுகளுக்கு புத்திமதி கூறி தான் பால் கறக்கும் போது மாடுகள் பால் சுரக்க வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று காவல் நிலையத்தில் கோரிக்கை வைத்துள்ளார் ராமைய்யா.
இவரின் கோரிக்கையை கேட்டு ஆடிப்போன போலீசார் ராமய்யாவை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பிவைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், சிரிப்பையும் ஏற்படுத்தியுள்ளது என்று தான் சொல்லவேண்டும்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- BREAKING: குருநாதா, நீ இங்கையும் வந்துட்டியா...? இந்தியால '2 பேருக்கு' ஓமிக்ரான் வைரஸ் கன்ஃபார்ம்...! - எந்த மாநிலத்தில்...?
- 'அவர' வழியனுப்ப நாம எல்லாரும் கண்டிப்பா போகணும்...! 'சாலையில் இறந்த ஆதரவற்ற மனிதர்...' - 3000-க்கு அதிகமான மக்கள் இறுதி அஞ்சலி...!
- எல்லாரும் சீக்கிரம் ஓடி வாங்க...! இது 'என்ன'னு தெரியுதா...? பார்க்க 'அது' மாதிரியே இருக்கு இல்ல...! எப்படி இந்த 'வடிவத்துல' ஆச்சு...? - குழம்பிய விவசாயிகள்...!
- நான் பட்ட 'கஷ்டம்' அடுத்த தலைமுறை படக் கூடாது சார்...! 'இந்த நிலைமைலையும் அவர் செய்த மகத்தான காரியம்...' - 'பத்மஸ்ரீ' விருது பெற்றவர் குறித்த 'வியக்க' வைக்கும் பின்னணி...!
- வெளிநாடுகளை 'மிரட்டி' வந்த ஏ.ஒய்.4.2 ரக கொரோனா... கடைசியில நம்ம 'பக்கத்து மாநிலத்துக்கே' வந்துடுச்சு...! - உறுதி செய்த சுகாதாரத் துறை...!
- 'நாங்க கல்யாணம் பண்றதுல...' உங்களுக்கு என்னங்க பிரச்சனை...? 'இதெல்லாம் உங்களுக்கு தேவை இல்லாத வேலை...' - சர்ச்சையில் வைரலான 'திருமண' புகைப்படம்...!
- அட பாவி பயலுகளா...! ரோட்டு சைடுல 'என்ன காரியம்' செஞ்சு வச்சுருக்கீங்க...? 'அதுவும் ஒண்ணு ரெண்டு இல்ல...' 'ஒரு கிலோ மீட்டருக்கு...' - 'என்னத்த' சொல்றதுன்னே தெரியல...!
- ஒரு இளைஞரை காதலித்த 2 இளம்பெண்கள்.. ‘யாராவது ஒருத்தர் விட்டுக்கொடுங்கம்மா’.. முடியாது என அடம்பிடித்த பெண்கள்.. கடைசியில் பஞ்சாயத்தார் சொன்ன ‘கிரேட்’ ஐடியா..!
- சும்மா வீட்டுக்கு பின்னாடி 'நட்டு' வச்சிருக்காரு...! 'ஆரம்பத்துல சின்னதா தான் இருந்துச்சு...' அப்புறம் ஏன் 'இப்படி' ஆச்சு...? - பிரமிக்க வைக்கும் 'அதிசய' எலுமிச்சை பழம்...!
- கர்நாடக மாநிலத்தின் 'புதிய முதல்வர்' தேர்வு...! 'ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் அறிவிப்பு...' - இவரின் பின்னணி என்ன...?