'டெய்லி விஸ்கி குடிக்கும் எருமை...' 'இந்த எருமையோட அதுக்கு செம கிராக்கி...' இதோட உணவு பட்டியலை கேட்டாத்தான் தலையே சுத்துது...!
முகப்பு > செய்திகள் > இந்தியாஒரு எருமையை வைத்து ஆண்டுக்கு 1 கோடி ரூபாய் சம்பாதிக்கும் ஹரியானவை சேர்ந்த குடும்பம். இரவில் விஸ்கியோடு முடிகிறது இதன் உணவு பட்டியல்.
சண்டிகரின் தலைநகரான ஹரியானாவில் நரேஷ் குமார் என்பவர் இந்தியாவிலேயே மிக பெரிய எருமை மாட்டை வளர்த்து வருகிறார். சுல்தான் என்று பெயரிடப்பட்ட இந்த எருமைக்கிடா சாதாரண மாட்டின் எடையை விட இருமடங்கு அதிகம் என்கின்றார் நரேஷ்.
மேலும் இந்த சுல்தானுக்கு மட்டும் தினமும் ரூ.2,800 முதல் ரூ.3,100 வரை செலவிடுகிறார்கள் என்று சொன்னால் தலையே சுற்றுகிறது. ஏனென்றால் இந்த சுல்தான் எருமைக்கிடாவது ஒரு நாளைக்கு 10 லிட்டர் பால், 15 கிலோ ஆப்பிள், 20 கிலோ கேரட், 10 கிலோ தானியங்கள், 10-12 கிலோ பசுந்தழைகள் தின்னுமாம்.
இந்த சுல்தான் 5 அடி 11 அங்குலம் உயரமும் 14 அடி நீளம் உடையது. இதனை தினமும் காலை, மாலை என இரு வேளையும் 5 கி.மீ. நடை பயணம் அழைத்து செல்வார்களாம். இதன் உணவு பட்டியல் ஆனது இரவு ஒரு பாட்டில் விஸ்கியோடு முடிவடைகிறது.
அதோடு மட்டுமில்லாமல் சுல்தானின் விந்துவுக்கு நாடு முழுவதும் கிராக்கி உள்ளது எனவும், ஒரு டோஸ் விந்து ரூ.300-க்கு விற்பனை செய்வதாகவும் சொல்கிறார் நரேஷ் குமார். சுல்தானின் உதவியோடு ஆண்டுக்கு ரூ.1 கோடி சம்பாதிப்பதாகவும் கூறுகிறார். மேலும் எருமைக் கிடா போட்டிகளில் 'சுல்தான்' பங்கேற்று 7 முறை பரிசு வென்றுள்ளதாகவும், தற்போது இந்த எருமையின் மதிப்பு ரூ.21 கோடி ஆகும் என பெருமைப்பட்டு கொள்கிறார் ஹரியானவை சேர்ந்த நரேஷ் குமார்.
மற்ற செய்திகள்