'இப்படி' ஒரு நைவேத்தியமா...? 'விஷயத்தை' கேள்விப்பட்டு அலைகடலென திரண்ட சிவபக்தர்கள்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஆந்திராவில் தீவிர சிவன் பக்தர் ஒருவர், பஞ்சராம க்ஷேத்திரங்களில் ஒன்றான க்ஷீர ராமலிங்கேஸ்வர சுவாமி கோயிலில் உள்ள சிவபெருமானுக்கு ஐஸ்கிரீம் நைவேத்தியம் அளித்த செய்தி அனைவரிடையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

மேலும், ஐஸ்கிரீம் அலங்காரத்தில் இருந்த சிவனைக் காண திரளான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தந்தவண்ணம் உள்ளனர். பொதுவாக கடவுளுக்கு நைவேத்தியம் செய்யப்படும் பொருள் கோயிலுக்கு வரும் அனைத்து பக்கதர்களுக்கும் வழங்கப்படுவது மரபு.

ஏனென்றால் கடவுளுக்கு படைக்கப்படும் பிரசாதத்துடன் பக்தர்கள் ஆசிர்வதிக்கப்படுவார்கள் என்று அதற்கு அர்த்தம். பொதுவாக திருவிழாக் காலங்களில் கோயில்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு பக்தர்கள் அதிக அளவில் வருகை தருவது வாடிக்கை.

இந்த சிவன் கோயிலுக்குச் செல்லும் மக்கள் சில சுவையான பிரசாதங்களை பெறுவதற்காகவே செல்வார்கள் என்று கூறலாம்.

காரணம் என்னவென்றால் இங்கு வரும் பக்தர்கள் பால் அல்லது தயிர் நைவேத்யத்தை இறைவனுக்கு அபிஷேகமாக வழங்குகின்றனர். சில பக்தர்கள் தேன், சர்க்கரை மற்றும் பலவிதமான பழச்சாறுகளை தெய்வத்திற்கு படைத்து வழிபடுகிறார்கள்.

நைவேத்யத்தை நிறைவேற்றுவதன் மூலம் இறைவன் அவர்களை ஆசீர்வதிப்பார் என்று நம்பப்படுகிறது. அதனால்தான் அக்ககோயிலில் உள்ள தெய்வம் 'போலா சங்கரா' என்று கூறப்படுகிறது.

பாலகோல் பகுதியை சேர்ந்த தேவெல்ல நரசிம்ம மூர்த்தி என்னும் பக்தர், சிவபெருமானுக்கு 10 கிலோ ஐஸ்கிரீமை நைவேத்தியமாக வழங்கியதன் மூலம் அவர் தனது சொந்தப் பகுதியில் மிகவும் பிரபலமாகியுள்ளார். சிவலிங்கத்தின் மீது ஐஸ்கிரீம் ஊற்றப்பட்டதால் பக்தர்கள் ஏராளமானோர் வரிசையில் நின்று அந்த அற்புதமான காட்சியை பார்த்து பரவசமடைகின்றனர்.

அதேபோன்று பிரசாதமாக வழங்கப்பட்ட குளிர்ந்த ஐஸ்கிரீமை ருசிக்க சிவ பக்தர்கள் பலர் நீண்ட வரிசையில் நின்றனர். பொதுவாக இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் பாயசம், சக்கர பொங்கல் மற்றும் பூர்ணம் போன்றவற்றைப் பயன்படுத்தி நைவேத்தியம் செய்து பிரசாதமாக வழங்கும் நிலையில், ஐஸ்கிரீம் நைவேத்தியத்தை பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர்.

சிவன் பக்தர், ஐஸ்கிரீம், நைவேத்தியம், ICE CREAM

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்