'என்ன கொல்றதுக்கு 60,000 ரூபாய் பணம் தரேன்...' 'என் பொண்டாட்டி, புள்ளைங்களாவது நிம்மதியா வாழட்டும்...' தன் உயிருக்கு விலை பேசி கொலையான தொழிலதிபர்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாடெல்லியில் தொழிலதிபர் ஒருவர் காப்பீட்டு தொகை கிடைக்க வேண்டும் என தன்னைத் தானே ஆள் வைத்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியை சேர்ந்த 37 வயதான கவுரவ் பன்சல் என்பவர் சொந்தமாக தொழில் செய்து வருகிறார். கவுரவ் பன்சல் மற்றும் அவரது மனைவி ஷானு மற்றும் குழந்தைகள் ஆர்யா நகர் பகுதியில் வசித்து வந்தனர்.
தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக கடன் தொல்லையில் ஆளான கவுரவ் பன்சல் தன் குடும்பமாவது, கடன் தொல்லை இல்லாமல் வாழ தன் பெயரில் உள்ள காப்பீடு தொகை கிடைப்பதற்காக ஒரு விபரீத யோசனையை செயல்படுத்தியுள்ளார்.
ரூ.60,000யை கூலிப்படைக்கு கொடுத்து தன்னையே ஆளை வைத்துக் கொலை செய்யச் சொல்லி கொலையாகியுள்ளார். கவுரவ் பன்சல் கடந்த 9 ம் தேதி திடீரென காணாமல் போகியுள்ளார். அதற்கு அடுத்த நாளே கைகள் கட்டப்பட்ட நிலையில் மர்மமான முறையில் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சுராஜ், மனோஜ்குமார் யாதவ், சுமித் குமார் ஆகியோரைக் கைது செய்தனர். அவர்கள் கொடுத்த வாக்குமூலம் மூலமே கவுரவ் பன்சல் அவரையே கொல்ல திட்டம் தீட்டியது அம்பலம் ஆனது.
கவுரவ் பன்சால் தனக்கு சேர வேண்டிய காப்பீட்டுத் தொகை ரூ.10 லட்சம், தான் இறந்த பிறகு தன் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டும் என இவ்வாறு செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
கடன் தொல்லை இன்றி தன் குடும்பம் அமைதியாக வாழ தன் உயிரையே விலை பேசி கொலையுண்ட சம்பவம் அனைவர் மத்தியிலும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ட்ரெயின்ல நாங்க சீட் புடிச்சு தரோம்மா...' 'சிறுமியை ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு கூட்டிட்டு போய்...' 'டெல்லியில் நடந்த...' பதற வைக்கும் கூட்டு பாலியல் வன்கொடுமை...!
- 'பரிசோதிக்கப்படும்' 3-ல் ஒருவருக்கு கொரோனா 'பாஸிடிவ்...' 'எல்லை மீறி போய் விட்ட நகரம்...' 'அதிர்ச்சி' அளிக்கும் 'ரிப்போர்ட்...'
- "1 வாரத்தில் 20 ஆயிரம் படுக்கைகள் தயார் செய்யணும்!".. அர்விந்த் கெஜ்ரிவால் அதிரடி!.. என்ன நடக்கிறது டெல்லியில்?
- 'சவக்குழிக்கு ரிசர்வேஷன் போயிட்டு இருக்கு...' 'இடம் கிடைக்கிறது பயங்கர ரிஸ்க்காம்...' 10 வருஷம் முன்னாடியே சவக்குழி புக் பண்ணினவங்களும் உண்டு...!
- கார் பார்க்கிங்கில் விளையாடிக் கொண்டிருந்த 10 மாத குழந்தை!.. ரிவர்ஸ் வரும் போது நடந்த கோரம்!.. நெஞ்சை நொறுக்கும் சோகம்!
- ஆம்புலன்ஸ் சைடு மிரரைப் பார்த்து முகச்சவரம்!.. நெட்டிசன்களின் இதயத்தை வென்ற டிரைவர்!.. ரியல் ஹீரோஸ் இவங்க தான்!
- 'ஈவு இரக்கமின்றி 51 முறை'... டெல்லி வன்முறையில் கொல்லப்பட்ட ஐ.பி அதிகாரி!.. வெளியான பகீர் தகவல்
- "மச்சி... பப்ஜி விளையாடலாமா?".. "போன் இல்லயேடா!"... பப்ஜி மோகத்தால் சிறுவர்கள் விபரீதச் செயல்!.. அதிர்ச்சியில் உறைந்த காவல்துறை!
- ‘4 பேருக்காக வந்த விமானம்’.. வாடகை எவ்ளோனு கேட்டா ‘ஷாக்’ ஆகிடுவீங்க.. மிரளவைத்த தொழிலதிபர்..!
- ‘உறங்கிக் கொண்டிருந்த குடிசைவாசிகள்’.. மளமளவென பிடித்த தீவிபத்து! நள்ளிரவில் நடந்த கோரம்!