வேண்டாம் ரிஸ்க்... யாரும் 'அந்த பக்கம்' போகாதீங்க...! 'மக்களை அலறவிட்ட பிளாஸ்டிக் டிபன் பாக்ஸ், திறந்து பார்த்தா...' - எப்படி 'இது' இங்க வந்துச்சு...?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகருக்கு அருகே உள்ள தலைக் கிராமத்தில் மக்கள் உலாவும் இடத்தில் ஒரு பை கிடப்பதாக அப்பகுதி மக்கள் போலீசாரிடம் தகவல் கொடுத்துள்ளனர்.

இதுகுறித்து பஞ்சாப் மாநில காவல் துறை இயக்குநர் ஜெனரல் தின்கர் குப்தா செய்தியாளர்களிடம் பேசும் போது, 'மக்கள் கொடுத்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்றோம்.

அப்போது, அந்த பையை போலீசார் திறந்து பார்த்த போது அதில், வெடிகுண்டுகள் (ஐஇடி) அடங்கிய ஒரு பிளாஸ்டிக் டிபன் பாக்ஸ் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதில், 5 கையெறி குண்டுகள் மற்றும் 9 எம்எம் பிஸ்டலுக்கான 100 ரவைகளும் இருந்தன. அந்த பாக்ஸில் சுமார் 2 கிலோ வெடிமருந்துகள் இருந்துள்ளன.

எங்களின் சந்தேகம் பாகிஸ்தான் எல்லையில் வான் பகுதியில் பறந்த ட்ரோன்கள் மூலம் இந்த பை இந்திய பகுதிக்குள் வீசப்பட்டிருக்கலாம் என நினைக்கிறோம்.

இந்த சம்பவம் குறித்து நாங்கள் தேசிய பாதுகாப்புப் படையின் உதவியை நாடி உள்ளோம். அதோடு, இப்போது சுதந்திர தினம் என்பதால் தாக்குதல் நடத்த ஏதேனும் சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளதா என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம்' எனத் தெரிவித்தார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்