‘சமையல்காரங்க ஹெட்போன் மாட்டிருந்தாங்க!’.. பள்ளி மதிய உணவு பாத்திரத்தில்.. விழுந்து 3 வயது குழந்தை பலி!.. கதறிய தந்தை!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

உத்தரப் பிரதேசத்தில் பள்ளி ஒன்றில் சூடான உணவுப் பொருட்கள் சமைக்கப்பட்டு கொண்டிருந்தபோது, மதிய உணவு பாத்திரத்தில் 3 வயது குழந்தை விழுந்து இறந்த சம்பவம் பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

உத்தரப் பிரதேசத்திலுள்ள வராம்பூர் அடாரி கிராமத்தின் பள்ளியில்தான் இந்த மூன்று வயது குழந்தை மதிய உணவு பாத்திரத்தில் விழுந்து இறந்துள்ளது. இதுபற்றி பேசிய குழந்தையின் தந்தை, பள்ளியில் மதிய உணவை தயாரித்து சமையல்காரர்கள் தங்கள் காதுகளில் ஹெட்போன் போட்டுக் கொண்டு பாடல்கள் கேட்டுக் கொண்டே பணிபுரிந்துக் கொண்டிருந்ததாகவும், அதனால் குழந்தை பாத்திரத்தில் விழுந்ததை அவன் கவனிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டி உள்ளார்.

இதுகுறித்து மிர்சாபூர் மாவட்ட மாஜிஸ்திரேட் சுஷில் குமார் படேல் கூறுகையில், பள்ளி தலைமை ஆசிரியரை உடனடியாக இடைநீக்கம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இன்னொருபுறம் மிர்சாபூர்  அடிப்படை கல்வி அதிகாரி வீரேந்திர குமார் சிங் பேசியபோது, இந்த விஷயம் தனக்கு தெரியவந்ததை அடுத்து இது குறித்து FIR பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், சம்பந்தப்பட்ட தொகுதி கல்வி அதிகாரியிடம் இருந்து

முறையான அறிக்கை கிடைத்த பிறகு இதை முழுமையாக விசாரித்து, நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியதோடு, பாத்திரத்தில் விழுந்து இறந்த குழந்தை அந்த பள்ளியில் பயிலும் மாணவி இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

SCHOOL, KID, GIRL, CHILD, MIDDAYMEAL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்