ஒரு 'பூஜ்யம்' அதிகமாகிருச்சு... பணத்தை அக்கவுண்ட்ல 'தப்பா' போட்டுட்டோம்... நிவாரண நிதியை 'திருப்பி' குடுங்க!
முகப்பு > செய்திகள் > இந்தியாமழை, வெள்ளத்தின்போது அளித்த நிவாரண நிதியை சுமார் 97 பேர் திரும்ப கேட்டுள்ளனர்.
கடந்த 2018-ம் ஆண்டு கேரளா கடுமையான மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. மாநில அரசு, அதிகாரிகள், தேசிய பேரிடர் மீட்பு படை, ராணுவ வீரர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என பலரும் இணைந்து கேரள மக்களை வெள்ளத்தில் இருந்து மீட்கும் பணியில் இடைவிடாது ஈடுபட்டனர். மாநிலத்தை புரட்டிப்போட்ட இந்த வெள்ளத்தில் லட்சக்கணக்கான மக்கள் முகாம்களில் தங்கும் நிலை உருவானது.
இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில் வசித்தவர்களும் கேரள அரசுக்கு தங்களால் இயன்ற நிதியை அளித்தனர். இதற்காக ஆன்லைனில் வசதி ஏற்படுத்தப்பட்டு இருந்தது. இந்த நிலையில் வெள்ளத்தின்போது தாங்கள் வழங்கிய நிவாரண நிதியைத் திரும்ப வழங்க வேண்டும் எனக் கேட்டு 97 பேர் விண்ணப்பித்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 97 பேரும் திருப்பிக் கேட்கும் தொகை 55.18 லட்சம் ரூபாய்.
பணத்தைத் திருப்பிக் கேட்பவர்கள் தங்கள் விண்ணப்பத்தில் அதற்கான காரணத்தையும் கூறியுள்ளனர். அதாவது தவறுதலாக பணத்தை அளித்து விட்டதாகவும், ஒரு பூஜ்யம் அதிகமாகி விட்டது என்றும் அதுபோக மீதப்பணத்தை அளிக்கும்படியும் காரணம் தெரிவித்து இருக்கின்றனர். வழக்கமாக இதுபோல நிவாரண நிதியை திரும்ப அளிப்பது இல்லை என்றாலும் இவர்களுக்கு கேரள அரசு பணத்தை திரும்ப அளிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- நாளை உருவாகும் 'ஆம்பன்' புயல்... 'இந்த' பகுதிகள்ல எல்லாம்... 'மழைக்கு' வாய்ப்பு இருக்கு!
- கொரோனாவால 'ஒருத்தரு' கூட இறக்கல... தென்னிந்தியாவிலேயே 'இந்த' மாநிலம் தான் செம கெத்து!
- ‘அப்பாவ கடைசியாகக் கூட பார்க்காத முடியாத சோகம்'... ‘கலங்கவைக்கும் இளைஞரின் வாழ்க்கையில் நடந்த சந்தோஷம்’!
- "அதெல்லாம் தெரியாது.. என் அக்காவ அரெஸ்ட் பண்ணியே தீரணும்!".. போலீஸாரை நிறுத்தி புகார் அளித்த 8 வயது சிறுவன்.. காவல்நிலையம் வரவழைக்கப்பட்ட அக்கா!
- 'இந்த 9 மாவட்டங்களுக்கு கனமழை...' சென்னையில் மழை பெய்யுமா...? வானிலை ஆய்வு மையம் தகவல்...!
- இந்த இக்கட்டான நேரத்துலையும் ‘வேறலெவல்’ பண்ணிட்டீங்க.. திரும்பி பார்க்க வைத்த ‘கேரளா’.. குவியும் பாராட்டு..!
- 'இந்திய' பெருங்கடலில் ஏற்படும் 'மாற்றம்' உலகம் முழுவதிலும்... எச்சரிக்கும் நிபுணர்கள்!
- "இன்ஸ்டாகிராம் காதலி ஹெல்ப் கேட்டா!".. "அதுக்கு இப்படியா செய்வீங்க?".. லாக்டவுனில் போலீஸாரை உறையவைத்த 3 புள்ளிங்கோக்கள்!
- 'ஒத்திவைக்கப்பட்ட 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான’... ‘பொதுத் தேர்வு தேதியை அறிவித்த மாநிலம்’... ‘கொரோனா பாதிப்பு குறைவால் அதிரடி’!
- 'தனியாக இருக்கும் பெண்களின் அறைக்குள் நுழைந்து 'இரவு முழுவதும் படுக்கை மெத்தைக்கு அடியில் பதுங்கி இருப்பதே வாடிக்கை!'.. சிசிடிவியால் சிக்கிய இளைஞர்!