காணாமல் போனவர்.. ‘ஃபிரிட்ஜுக்குள் சடலமாக கிடைத்த பயங்கரம்’.. ‘விசாரணையில் வெளிவந்த அதிரவைக்கும் காரணம்’..

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

முதியவர் ஒருவரை வீட்டு வேலையாள் கொலை செய்து உடலை குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்து கடத்திச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காணாமல் போனவர்.. ‘ஃபிரிட்ஜுக்குள் சடலமாக கிடைத்த பயங்கரம்’.. ‘விசாரணையில் வெளிவந்த அதிரவைக்கும் காரணம்’..

91 வயதான கிருஷ்ணன் கோஷ்லா என்பவர் தெற்கு டெல்லியில் அவரது மனைவியுடன் வசித்து வந்துள்ளார். இவர்களுடைய வீட்டில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக பீகாரைச் சேர்ந்த கிஷன் என்பவர் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை கிருஷ்ணன் காணாமல் போனதாக அவருடைய குடும்பத்தினர் போலீஸில் புகார் அளித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து போலீஸார் நடத்திய விசாரணையில் கிருஷ்ணனை அவருடைய வீட்டு வேலையாள் கிஷன் கொலை செய்தது தெரியவந்துள்ளது. சம்பவத்தன்று கிருஷ்ணனின் வீட்டுக்கு வந்த கிஷன் அவருக்கும், அவருடைய மனைவிக்கும் மயக்க மருந்து கொடுத்து அவர்களை முதலில் மயக்கமடையச் செய்துள்ளார். பின்னர் வெளியே சென்ற கிஷன் 5 பேர் கொண்ட கும்பல் ஒன்றை அழைத்து வந்து கிருஷ்ணனை கடுமையாகத் தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பின்னர் அவரது உடலை குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்து அங்கிருந்து கடத்திச் சென்றுள்ளார்.

விசாரணையில் கிஷன் கூறிய தகவல்களின் அடிப்படையில் டெக்கிரி என்ற பகுதியிலிருந்து குளிர்சாதனப் பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்த கிருஷ்ணனின் உடலை போலீஸார் மீட்டுள்ளனர். கிருஷ்ணன் தன்னிடம் வேலை வாங்கிய விதத்தால் அதிருப்தியில் இருந்த கிஷன் அதன்காரணமாக அவரைக் கொலை செய்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஆனால் அவருடைய வீட்டிலிருந்த நகை, பணம் ஆகியவையும் திருடப்பட்டிருப்பதால் கொலைக்கான காரணம் குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

DELHI, HELPER, OLDMAN, DEADBODY, BRUTAL, MURDER, REFRIGERATOR

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்