'ஒன்பது வருசத்துக்கு முன்னாடியே'...'இத பிளான் பண்ண மோடி'... பரபரப்பை ஏற்படுத்திய தகவல்!
முகப்பு > செய்திகள் > இந்தியா9 ஆண்டுகளுக்கு முன்பே, ஓட்டு போடுவதை கட்டாயமாக்க நரேந்திரமோடி திட்டமிட்ட தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
தேர்தல்களில் ஓட்டு போடுவதை கட்டாயமாக்க பா.ஜனதா உறுப்பினர் ஜனார்த்தன் சிங் சிக்ரிவால் நாடாளுமன்ற மக்களவையில் தனிநபர் மசோதா தாக்கல் செய்துள்ளார். இந்த மசோதா மீது நேற்று முன்தினம் விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய சக பா.ஜனதா உறுப்பினர்களான அஜய் டேனி மிஸ்ரா, நிஷிகாந்த் துபே, பிஜு ஜனதாதள உறுப்பினர் பார்த்ருஹரி மகதாப் ஆகியோர் மசோதாவுக்கு எதிராக பேசினார்கள். இதுதொடர்பான விவாதம் இனிவரும் நாட்களிலும் நடைபெற இருக்கிறது.
இதனிடையே 9 ஆண்டுகளுக்கு முன்பே பிரதமர் மோடி ஓட்டு போடுவதை கட்டாயமாக்கும் முயற்சியில் ஈடுபட்ட தகவல் தற்போது வெளியாகியுள்ளது. மோடி குஜராத் மாநில முதலமைச்சராக இருந்த போது கடந்த 2010-ம் ஆண்டு, நடைபெற இருந்த உள்ளாட்சி தேர்தலில் ஓட்டு போடுவதை கட்டாயமாக்க திட்டமிட்டார். ஆனால் அப்போது கவர்னராக இருந்த கமலா பேனிவால் அதனை கடுமையாக எதிர்த்தார். கருத்துரிமையையும், ஓட்டு போடாமல் இருக்கும் உரிமையையும் அளிக்கும் அரசியல் சட்டத்தின் 19(1)(ஏ)-வது பிரிவை மீறும் வகையில் இருப்பதாக கூறி அதற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்தார். இதனால் அப்போது மோடியால் அந்த முடிவை எடுக்க முடியவில்லை.
மோடிக்கு பிறகு ஆனந்திபென் பட்டேல் முதலமைச்சராக பொறுப்பேற்றார். அவர் மோடியின் கனவு திட்டமான, ஓட்டு போடுவதை கட்டாயமாக்கும் மசோதாவை கையிலெடுத்து அதில் வெற்றியும் பெற்றார். மோடி அரசால் நியமிக்கப்பட்ட கவர்னர் ஓ.பி.கோலி, ஒப்புதல் அளித்ததால், அந்த மசோதா சட்டமாக உருப்பெற்றது. இருப்பினும் அந்த மசோதாவிற்கு குஜராத் ஐகோர்ட்டு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'தோனி' பாஜகவில் இணைய போறாரா'?... பரபரப்பை கிளப்பியிருக்கும் பிரபலம்'!
- 'அப்பா' என்ன கொலை பண்ண திட்டம் போட்டிருக்காரு'... 'எம்.எல்.ஏ' மகள் வெளியிட்ட பரபரப்பு வீடியோ'!
- 'அது எப்படி ராகுலைப் பார்த்து'.. 'அப்படிச் சொல்லலாம்?'... அவதூறு வழக்கில் சிக்கிய சுப்ரமணிய சுவாமி!
- 'யானை புகுந்த நிலம்' .. இன்றைய மத்திய ஆட்சி எப்படி இருக்கு? அப்பவே 'புறநானூறுல' .. கலகல வீடியோ!
- தப்பான பாதையில் ஏன் வரீங்கனு கேட்ட காவலர் மீது காரை ஏற்றிய பாஜக தலைவரின் டிரைவர்..! பரபரப்பை ஏற்படுத்திய சிசிடிவி காட்சி!
- '14 பேரை காவு வாங்கிய டெண்ட்'.. திடீரென நடந்த கோர விபத்தால் ஏற்பட்ட சோகம்!
- 'இதுக்காகதான் போன பாத்துட்டு இருந்தாரா?'.. அதுமட்டுமில்ல, ராகுலின் இன்னொரு வைரல் காரியம்!
- 'சீ' அசிங்கமா இல்ல' ... 'பொண்ணுங்க முன்னாடி இப்படியா'?... 'மெட்ரோ'வில் நடந்த அதிர்ச்சி சம்பவம்' !
- 'பொண்ணுங்களுக்கு' மட்டும் இலவசமா?... 'வேண்டாம்'... 'எல்லாரும் காசு கொடுத்து போட்டும்'!
- 'பிரதமர் மோடி'யோட அண்ணனா'?... 'வைரலாகும் புகைப்படம்' ... உண்மை என்ன?