'கணவருக்காக கதறிய பெண்'... 'நான் வாழ்க்கையை வாழ்ந்து முடிச்சிட்டேன்'... '85 வயது முதியவர் செய்த நெகிழ்ச்சி செயல்'... ஆனா 3 நாளில் நடந்த சோகம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாதனக்கு ஒரு தேவை இருந்தும், அதைப் பற்றிக் கவலைப்படாமல் 85 வயது முதியவர் செய்த உதவி பலரையும் நெகிழச் செய்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை படு வேகமாகப் பரவி வருகிறது. இந்த இரண்டாம் பரவல் கொரோனா அலை இளம் வயதினரை அதிகமாக தாக்கி வருகிறது. இதனால் ஏராளமான இளம் வயதினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனிடையே மகாராஷ்டிரா மாநிலத்தில் நாக்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 85 வயது மதிக்கத்தக்க, நாராயண் பவுராவ் தபட்கர் என்ற முதியவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதனால் அவரின் ஆக்ஸிஜன் அளவு 60 ஆகக் குறைந்துவிட்டது. இருப்பினும் மருத்துவமனையில் அவரை அனுமதிப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. பின்னர், அவரது மருமகன் மற்றும் மகளின் பெரும் போராட்டத்திற்குப் பிறகு அவர் இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இருப்பினும் பலகட்ட முயற்சிக்குப் பின்னர் தான் நாராயண் பவுராவ் தபட்கருக்கு மருத்துவமனையில் ஒரு படுக்கை இடம் கிடைத்தது. அவர் மருத்துவமனையிலிருந்த நேரத்தில் பெண் ஒருவர் அழுதுகொண்டே தனது கணவரை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு வந்தார். அவருக்கும் கொரோனா தாக்கியிருந்தது. ஆனால் மருத்துவமனையில் படுக்கை தட்டுப்பாடு நிலவியதால், அவருக்குப் படுக்கை கிடைக்கவில்லை.
இதனால், அந்தப் பெண் தன் கணவருக்கு ஒரு படுக்கையைத் தேடிக்கொண்டிருந்துள்ளார். இதை எல்லாம் கவனித்துக் கொண்டிருந்த நாராயண் பவுராவ், தனது படுக்கையை அந்த பெண்ணின் கணவருக்கு கொடுக்க முடிவு செய்துள்ளார். ஆனால் உங்களுக்கே கஷ்டப்பட்டுத் தான் படுக்கை கிடைத்து. அதைக் கொடுத்தால் நீங்கள் என்ன செய்வீர்கள் என குடும்பத்தினர் கேட்டுள்ளனர்.
அதற்கு நாராயண் பவுராவ், ''நான் 85 வயதைத் தாண்டிவிட்டேன். அதோடு வாழ்க்கையில் எல்லாவற்றையும் பார்த்து, வாழ்க்கையை வாழ்ந்து முடித்து விட்டேன். ஆனால் அந்த மனிதனுக்குப் பின்னால் ஒரு முழு குடும்பமும் இருக்கிறது. அந்த நபரின் குழந்தைகளுக்கு அவர்களின் தந்தை தேவை. அவருக்கு ஏதாவது நடந்தால் மொத்த குடும்பமும் நிர்க்கதியாகி விடும்'' எனக் கூறி நாராயண் பவுராவ் தனது படுக்கையை அந்த பெண்ணின் கணவருக்கு விட்டுக் கொடுத்துள்ளார்.
இதன் பின்னர் நாராயண் பவுராவ் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்குத் தனது சிகிச்சையை எடுத்து வந்துள்ளார். ஆனால் வீட்டிற்குச் சென்று மூன்று நாட்களுக்குள் அவர் உயிரிழந்தார். தனக்கு ஒரு தேவை இருந்தாலும், அதிலும் தான் ஆபத்தில் இருப்பதை அறிந்தும் முதியவர் நாராயண் பவுராவ் செய்த உதவி பலரையும் கலங்க செய்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘இனி அதுக்கெல்லாம் அனுமதி கிடையாது’!.. நாடு முழுவதும் கொரோனா பரவல் எதிரொலி.. ஐபிஎல் வீரர்களுக்கு புதிய கட்டுப்பாடு..!
- 'இந்தியாவில் 150 மாவட்டங்களில் முழு ஊரடங்கு'... 'அந்த லிஸ்டில் இருக்கும் தமிழக மாவட்டங்கள்'... சுகாதாரத்துறை பரிந்துரை!
- 'மனசெல்லாம் பாரமா இருக்கு!.. அத பார்த்து ஒடஞ்சு போயிட்டேன்'!.. பிரெட் லீ வீசும் பந்தின் வேகம் மட்டுமல்ல... அவரோட பாசமும் ரொம்ப அதிகம்!!
- 'கொரோனா கொஞ்சம் தள்ளி போய் விளையாடு பா'... 'உலகையே திரும்பி பார்க்க வைத்த இஸ்ரேல்'... வெற்றியின் பின்னணியில் ஒரே ஒரு மந்திரம்!
- ஏதோ 'ஒண்ணு ரெண்டு' வாங்கிட்டு வந்துருப்பாங்கன்னு நெனச்சு வெளிய வந்து பார்த்தா... 'ஒரு டெம்போவே நிக்குது...' 'தம்பதி செய்த நெகிழ வைக்கும் காரியம்...' - திக்குமுக்காடி போன மருத்துவர்கள்...!
- 'வீராப்பாக கிளம்பி வந்துட்டு... இப்படி வசமா மாட்டிகிட்டோமே'!.. பரிதாபமான நிலையில் ஆஸ்திரேலிய வீரர்கள்!.. என்ன செய்யப்போகிறது பிசிசிஐ?
- 'அடிச்சாரு பாருய்யா சிக்ஸர்'!.. சொந்த ஊருக்கு திரும்பும் குழப்பத்தில் வெளிநாட்டு வீரர்கள்!.. கிறிஸ் லின் போட்டுக்கொடுத்த சூப்பர் ப்ளான்!
- மனசுக்கு கஷ்டமா இருக்குங்க...! 'என் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணனும் தான்...' 'ஆனா அதவிட இப்போ இது தான் ரொம்ப முக்கியம்...' - நெகிழ வைத்த தந்தை...!
- 'சொல்லவும் முடியல... மெல்லவும் முடியல... குமுறும் வெளிநாட்டு வீரர்கள்'!.. ஐபிஎல் நடக்குமா?.. நடக்காதா?.. பிசிசிஐ அதிரடி அறிவிப்பு!
- 'டாக்டர் எப்படி அந்த வார்த்தையை சொல்லலாம்'... 'பேசிக்கொண்டிருக்கும் போதே பளார் விட்ட பெண் செவிலியர்'... வைரலாகும் வீடியோ!