'மனிதர்களை கொன்ற கொரோனாவால்... மனிதத்தை கொல்ல முடியவில்லை!'... 7 வயது சிறுவன் முதல் 82 வயது மூதாட்டி வரை... கொரோனா தடுப்பு பணிகளுக்கு... அள்ளி வழங்கும் நெஞ்சங்கள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா வைரஸ் தடுப்பு பணிகளுக்காக மத்திய மாநில அரசுகள் குடிமக்களிடம் நிதியுதவி கோரியுள்ளன. இதன் விளைவாக, தனிமனிதர் தொடங்கி பெரு நிறுவனங்கள் வரை பலர் உதவிக்கரம் நீட்டிவருகின்றனர்.
அந்த வகையில், மத்தியப் பிரதேச அரசும் அம்மாநிலத்தில் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த நிதியுதவி அளிக்கும்படி பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தது. இந்த செய்தி, சல்பா உஸ்கர் என்ற 82 வயது மூதாட்டிக்கு தெரியவந்தது.
அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற இவர், கொரோனா வைரஸ் தடுப்புப் பணிகளுக்கு உதவ, தன்னுடைய ஓய்வூதியத்தில் இருந்து ரூ.1 லட்சத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கி உள்ளார். இத்தகவலை அரசு அதிகாரிகள் நேற்று உறுதி செய்தனர்.
இதுகுறித்து மூதாட்டி சல்பா உஸ்கர் கூறும்போது, "கொரோனா ஒழிப்புக்கு உதவ முடிவெடுத்தேன். தற்போது நாடு முழுவதும் அமலில் உள்ள முழு அடைப்புக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டுகிறேன். அரசு வெளியிடும் உத்தரவுகளை மதித்து பின்பற்ற கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.
இவர் வேண்டுகோள் விடுக்கும் வீடியோவை, ம.பி. மக்கள்தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி உள்ளது. அந்த வீடியோவை முதல்வர் சிவ்ராஜ் சவுகான் தனது ட்விட்டர் பக்கத்தில்பகிர்ந்துள்ளார்.
அதேபோல மிசோரம் மாநிலத்தின் கோலாசிப் நகரைச் சேர்ந்த 7 வயது சிறுவன் ரோமல் லால்முவான் சங்கா. இந்த சிறுவன் தனது உண்டியலை உடைத்து அதில் இருந்து ரூ.333 சேமிப்பு பணத்தை உள்ளூர் கிராம அலுவலர்களிடம் வழங்கி உள்ளான்.
சிறுவனுடைய மனிதாபி மானத்தை முதல்வர் ஜோரம் தங்கா உட்பட பலரும் பாராட்டி வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- உலகம் முழுவதும் 'பொருளாதார' மந்தம் ஏற்படும்... இந்த 2 நாடுகள் மட்டும் 'எஸ்கேப்' ஆக வாய்ப்பு இருக்காம்... செம ஷாக்!
- சென்னையின் 'பிரபல' மால்... மூடப்படுவதற்கு முன் 'அங்கு' சென்றவர்கள்... சுகாதாரத்துறை எச்சரிக்கை!
- ‘கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்ணின் செல்போனை வாங்கிபார்த்த செவிலியருக்கு நேர்ந்த கதி?’.. பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!
- ‘என் அப்பா ஒரு போலீஸ்’.. ‘உங்களுக்காகதான் எங்கள பிரிஞ்சு அவர் இருக்காரு’.. ‘தயவுசெஞ்சு நீங்க...!’.. மகளின் உருக்கமான பதிவு..!
- ‘காய்ச்சல், இருமல் இருக்கானு’... ‘கொரோனா ஆய்வுக்கு சென்ற சுகாதார ஊழியர்களுக்கு’... ‘வாணியம்பாடி மக்களால் நடந்த பரபரப்பு’!
- 'நான் பெத்த மவனே லாக்டவுன்...' 'லாக்டவுன்...' 'உள்ளேன் ஐயா...!' "பேரு வக்கிறதுல நாங்க தான் கிங்..." 'தொடரும் உ..பி'ஸ். அட்ராசிட்டிஸ்...'
- ‘பெண் புள்ளிங்கோக்களுக்கும் பாரபட்சம் பாக்கல!’ ஊரடங்கில் ஊர் சுற்றியவர்களை விதவிதமாய் கவனித்த காவல்துறை!
- Video: 'பூமழை பொழிந்து' மலர்மாலைகள் அணிவித்து ... துப்புரவு தொழிலாளிக்கு கிடைத்த 'மிகப்பெரிய' கவுரவம்... நெஞ்சை 'உருக்கும்' வீடியோ!
- 'கொரோனா' தடுப்பு 'நடவடிக்கைகள்...' 'தமிழக அரசு என்ன செய்துள்ளது...?' 'முதலமைச்சரின் உத்தரவுகள் என்ன?...''முழுமையான தகவல்களை எதில் தெரிந்து கொள்ளலாம்...?'
- ‘பொதுமக்களின் நலனுக்காக’... ‘நாளை முதல் வங்கிகள்’... 'ரிசர்வ் வங்கி புதிய உத்தரவு'!