'82% பேருக்கு எந்த அறிகுறியும் இல்லை...' 'திணறும் அசாம் அரசு...' '4 நெகடிவ்' முடிவுகள் வந்தால் மட்டுமே 'விடுவிக்க முடிவு...'

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

அசாமில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 82% பேருக்கு எந்த அறிகுறிகளும் இல்லை என அம்மாநில சுகாதார அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறியுள்ளார்.

அசாம் மாநிலத்தில் இதுவரை 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 12 பேர் குணமடைந்துள்ளனர். ஒருவர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், கொரோனா நிலவரம் குறித்து பேட்டியளித்த அம்மாநில சுகாதார அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா, தற்போது கொரோனா பாதித்த 82% பேருக்கு அறிகுறிகள் ஏதுவுமே தென்படவில்லை. எனக் கூறியுள்ளார்.

மேலும், "அவர்களில் பெரும்பாலானவர்கள் 50 முதல் 60 வயதுக்குட்ப்பட்டவர்கள். எனவே இனி மாநிலத்திலுள்ள மூன்று முக்கிய மருத்துவமனைகளுக்கு பொதுவான சிகிச்சைக்கு வரும் அனைவருக்கும் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ள முடிவு செய்துள்ளோம். 3 அல்லது நான்கு பரிசோதனைகளில் நெகடிவ் முடிவுகள் வந்தால் மட்டுமே குணமடைந்தவர்களாக அறிவிக்கிறோம்" என்றும் தெரிவித்துள்ளார்.

அறிகுறிகள் ஏதுமில்லாமல் பலர் இருப்பதால், தனிமைப்படுத்தல் காலத்தை 14 நாட்களிலிருந்து 28 நாட்களாக நீட்டித்திருப்பதாவும் அவர் குறிப்பிட்டார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்