'இத கொஞ்சம் கூட எதிர்பாக்கல'...'உற்சாகத்தில் பட்டதாரி இளைஞர்கள்'...'மராட்டியத்தில்' முதல் அதிரடி!
முகப்பு > செய்திகள் > இந்தியாஅரசு வேலை வாய்ப்பில் உள்ளூர் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவது வழக்கம். ஆனால் தனியார் நிறுவனங்களில் உள்ளூர் இளைஞர்களுக்கு 80 சதவீத வேலை வாய்ப்பு வழங்கப்படும் என மராட்டிய அரசு அறிவித்துள்ளது, அம்மாநில இளைஞர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மராட்டியத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளின் ‘மகா விகாஷ் முன்னணி' அரசு அமைந்து உள்ளது. இந்த நிலையில், நேற்று விதான்பவனில் சட்ட சபையின் கூட்டு கூட்டம் நடந்தது. இதில் அம்மாநில ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் தனது உரையில், '' மராட்டியத்தில் வேலைவாய்ப்பின்மை பிரச்சனையை தீர்க்க முக்கியத்துவம் வழங்கப்படும். அதற்காக ‘மகா விகாஷ் முன்னணி' அரசாங்கம் மிகுந்த அக்கறையுடன் செயல்படும்.
அதன்படி தனியார் நிறுவன வேலை வாய்ப்பில் மண்ணின் மைந்தர்களுக்கு 80 சதவீத இடஒதுக்கீடு கிடைப்பதற்கு வழிசெய்யும் வகையில் சட்டம் இயற்றப்படும். இதனால் மராட்டிய மாநில பட்டதாரி இளைஞர்கள் பெரிதும் பயன்பெறுவார்கள். மேலும் மாநிலத்தில் மலிவு விலை உணவகங்கள் திறக்கப்பட்டு சாமானிய மக்களுக்கு 10 ரூபாயில் சாப்பாடு வழங்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் கட்டப்படும். மாநிலத்தின் தற்போதைய பொருளாதார நிலைமை எவ்வாறு உள்ளது என்பது குறித்த அறிக்கை வெளியிடப்படும்.
இதனிடையே உழைக்கும் பெண்களை ஊக்குவிக்கவும், அவர்கள் பயன்பெறும் வகையிலும் பெண்களுக்கு ஒவ்வொரு மாவட்டங்களில் விடுதிகள் கட்டவும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்த்து அதில் இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்பு வழங்கப்படும். இதன் மூலம் வேலைவாய்ப்பின்மைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்'' என ஆளுநர் தனது உரையில் தெரிவித்துள்ளார்.
வேலைவாய்ப்பில் 80 சதவீதம் உள்ளூர் இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்ற அறிவிப்பு அம்மாநில பட்டதாரி இளைஞர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ஷிப்ட் போட்டு 'எம்எல்ஏ'-க்கள் பாதுகாப்பு.. '2 நிமிட' அவகாசத்தில்.. பாஜக கோட்டையை 'சரித்த' இளம்பெண்!
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!
- 7 ரன்களில் ‘எல்லோரும் டக் அவுட்’.. ‘754 ரன்கள்’ வித்தியாசத்தில் வெற்றி.. ‘இப்படியும் ஒரு மேட்சா!’..
- ‘ஓடும் ரயிலில்’.. ‘சிறுமிகளுடன் வந்த இளைஞருக்கு நடந்த கொடூரம்’.. ‘பதைபதைக்க வைக்கும் சம்பவம்’..
- கல்யாணத்தை 'கனவுலயும்' மறக்கக்கூடாது.. விருந்தினர்களுக்காக 8 லட்சத்துக்கு 'விஸ்கி' ஆர்டர்.. செய்த தம்பதி
- ‘முதலில் கணவர், அடுத்து 2 வயது குழந்தை’.. ‘காதலருடன் தப்பிய மனைவி செய்த அதிர்ச்சிக் காரியம்’..
- ‘கொதிக்கும் எண்ணெயைக் கொண்டு வந்து’.. ‘குழந்தைகளுடன் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணுக்கு’.. ‘ஆண் நண்பரால் நடந்த கொடூரம்’..
- ‘சம்பளத்தில் மாற்றம் செய்ய’... ‘பிரபல நிறுவனம் எடுத்துள்ள முடிவு’... விவரம் உள்ளே!
- 'ஹார்ட் ஆபரேஷன் பண்ணணும்'...'பேங்க்'ல இருந்து பணத்தை எடுக்க முடியல'...முதியவருக்கு நேர்ந்த துயரம்!
- '73 கோடி' ரூபா 'தண்ணிய' திருடிட்டாங்க..போலீஸ் 'கேஸ்' கொடுத்த மனிதர்!