நடுவானில் விமானத்தில் கேட்ட அபாய ஒலி.. விளையாட்டாக சிறுமி செஞ்ச வேலையால் அதிர்ந்துபோன பயணிகள்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

விமானத்தில் சிறுமி ஒருவர் எமெர்ஜென்சி எக்சிட்டை திறக்க முயற்சித்தால் பயணிகள் அனைவரும் அதிர்ச்சியடைந்திருக்கின்றனர்.

Advertising
>
Advertising

                            Images are subject to © copyright to their respective owners.

அபாய ஒலி

அசாம் மாநிலத்தின் கவுகாத்தி விமான நிலையத்திலிருந்து சென்னைக்கு பயணிகள் விமானம் ஒன்று பயணித்திருக்கிறது. அந்த விமானத்தில் 147 பயணிகள் இருந்திருக்கின்றனர். அதில் கவுகாத்தியைச் சேர்ந்த ஹேம்நாத் தனது பேத்தி பிரசித்தா உட்பட குடும்பத்தினர் நான்கு பேருடன் இந்த விமானத்தில் பயணித்திருக்கிறார். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென விமானத்திற்குள் அபாய ஒலி கேட்க துவங்கியிருக்கிறது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர்.

Images are subject to © copyright to their respective owners.

என்ன நடக்கிறது என்பதை பணிப்பெண்களும் விமான ஊழியர்களும் பரபரப்புக்கு மத்தியில் கண்டுபிடித்து இருக்கின்றனர். அப்போது தான் பிரசித்தா தனது இருக்கைக்கு கீழே அவசர கால பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டிருந்த லைஃப் ஜாக்கெட்டை எடுத்து அணிந்து கொண்டிருந்திருக்கிறார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த விமான பணிப்பெண்கள் சிறுமியிடம் இருந்து அந்த உடையை வாங்கி இருக்கின்றனர்.

லைஃப் ஜாக்கெட்

அப்போது ஹேம்நாத் தனது பேத்தியிடம் என்ன செய்தாய் என விசாரித்து இருக்கிறார். அழுகையுடன் பதில் சொன்ன சிறுமி தனது இருக்கைக்கு கீழே இருந்த பட்டனை அழுத்தியதாகவும் அதன் பின்னர் லைஃப் ஜாக்கெட் வெளியே வந்ததாகவும் அதனை எடுத்து அணிந்ததாகவும் தெரிவித்திருக்கிறார். இதனை அடுத்து பாதுகாப்பு உடையை மீண்டும் அதே இடத்தில் வைத்து பணிப்பெண்கள் நிலைமையை சீராக்கினர். இதனைத் தொடர்ந்து அபாய ஒலியும் நின்றிருக்கிறது.

Images are subject to © copyright to their respective owners.

விசாரணை

இதனையடுத்து விமானத்தின் தலைமை விமானி ஹேம்நாத்திடம் இதுகுறித்து விசாரணை நடத்தினார். அப்போது தனது பேத்தி விளையாட்டாக இவ்வாறு செய்துவிட்டதாக அவர் தெரிவித்திருக்கிறார். இதனிடையே இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகளுக்கும் தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது. விமானம் சென்னையில் தரையிறங்கிய பின்னர், இதுபற்றி அதிகாரிகள் ஹேம்நாத்திடம் விசாரணையை மேற்கொண்டனர். அப்போது, பிரசித்தா எவ்வித தவறான நோக்கத்துடனும் இதை செய்யவில்லை என அறிவித்த அதிகாரிகள் ஹேம்நாத்திற்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

AIRPORT, CHENNAI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்