பேரிடர் மேலாண்மை தொடர்பான ஐநா பொதுக்கூட்டம் வருகிற மே 13 ஆம் முதல் 17 ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இந்த கூட்டத்தில், 140 நாடுகளை சேர்ந்த 3000 ஐநா பிரதிநிதிகள் கலந்துகொள்ளவிருக்கின்றனர். இந்நிலையில் இந்த பொதுக்கூட்டத்தில் மணிப்பூரை சேர்ந்த 2 ஆம் வகுப்பு படிக்கும் 7 வயது சிறுமி லிஸிப்ரியா கஞ்சுஜம் பங்கேற்று உரையாற்றாயிருக்கிறார்.
பேரிடர் மேலாண்மை தொடர்பான ஐநா பொதுக்கூட்டத்தில் பங்குபெறுபவர்களில் இவரே மிக குறைந்த வயது உடைய பிரதிநிதி. இந்நிலையில் இவர் இந்திய நாட்டில் உள்ள குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்காக இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளவிருக்கிறார். இவர் ஏற்கனவே கடந்த ஆண்டு பேரிடர் மேலாண்மை குறித்த ஆசிய மாநாட்டில் பங்குபெற்றுள்ளார்.
இந்நிலையில் சுனாமி, வெள்ளப்பெருக்கு போன்ற சம்பவங்களை தொலைக்காட்சியில் பார்க்கும்போது அதனால் பாதிப்படைந்தவர்களை பார்த்து மிகவும் வேதனை அடைந்ததாகவும் இதற்காக உலக மக்கள் ஒன்று கூட வேண்டும் என்றும் சிறுமி லிஸிப்ரியா தெரிவித்துள்ளார்.
இளம் வயதிலேயே உலக அரங்கில் உரையாற்றவிருக்கும் இந்த சிறுமிக்கு சமூகவலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'எனக்கு டி.வி. போடத் தெரியாது'.. 'பாப்பா ஓடி ஜெயிடுச்சு'னு சொன்னாங்க.. கள்ளகபடமின்றி பேசும் தாய்!
- டிக் டாக் செயலி: கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கம்!
- அடேங்கப்பா! அந்த விஷயத்துல அமெரிக்காவை முறியடித்த இந்தியா.. ஷாக்கிங் சர்வே!
- 12 மணிநேரத்தில் 2 நாடுகளில் 10 விக்கெட்.. அசால்ட் காட்டிய லசித் மலிங்கா..
- அப்படி என்ன பிரச்சனை? இந்தியாவை மீண்டும் சீண்டும் டிரம்ப்!
- 687 பக்கங்களை நீக்கியது ஃபேஸ்புக்! தேர்தலை முன்னிட்டு நடவடிக்கை...
- சிறுமிகளைக் கடத்தி கட்டாய மதமாற்றம் செய்த கும்பல்!
- நாட்டிலேயே சிறந்த முதல்வர் யார் தெரியுமா? இதோ கருத்துகணிப்பு முடிவு!
- ஹோலி பண்டிகையில் விபரீதம்: முதலுதவி செய்து காப்பாற்றிய புகைப்பட பத்திரிகையாளர்!
- ‘இப்படி எடக்கு மடக்கா கேள்வி கேட்டா என்னப்பா செய்றது?’: கதறும் தேர்தல் உதவி மையம்!