இவ 'கொடுமை' தாங்காம புருஷன் இறந்துட்டாரு... இப்போ என்னையும் 'வீட்டுல' அடைச்சு வச்சு... கோர்ட் கதவை தட்டிய 70 வயசு பாட்டி!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

வயதான காலத்தில் வேதனை தாங்காமல் 70 வயது மூதாட்டி கோர்ட் படியேறி இருக்கிறார்.

Advertising
Advertising

மும்பை பகுதியை சேர்ந்த 70 வயது மூதாட்டி தன்னுடைய மகள் தன்னை வீட்டு சிறையில் வைத்து இருப்பதாக ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார்.

அதில் அந்த பாட்டி கூறி இருப்பதாவது:-

எனது மகள் தனது ஆண் நண்பருடன் வாழ்க்கை அமைத்துக் கொண்டு, 1998-ல் வீட்டை விட்டு வெளியேறினார். 2 ஆண்டுகளில் வாழ்க்கை முறிந்து எனது மகள் தனது மகனுடன் பிரிந்து வந்தார். உறவினர்கள் தலையீட்டால் லோகண்ட்வாலா பகுதியில் உள்ள எனது குடியிருப்புக்கு மீண்டும் திரும்பி வந்தார்.

சில மாதங்களில் என்னையும், எனது கணவரையும் கொடுமைப்படுத்த ஆரம்பித்தார். இந்நிலையில், எனது கணவர் 2011 ஜனவரியில் காலமானார். அதைத்தொடர்ந்து நிதி ஆதாரங்களை பறித்துக்கொண்ட எனது மகள், என்னை தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்தார். வீட்டை விட்டு நான் தப்பி விடுவேன் என்ற அச்சத்தில் வீட்டுக்குள் பல மாதங்களாக சிறை வைத்தார்.

2018-ம் ஆண்டு ஆகஸ்டு 3-ந் தேதி வாய்ப்பு கிடைத்ததால் வீட்டை விட்டு தப்பிச்சென்றேன். சாலையை கடக்கும்போது ஆட்டோ மோதியதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டேன். அதன் பிறகு நீண்ட காலமாக படுத்த படுக்கையாக கிடந்தேன். கடந்த பிப்ரவரியில் எனது இன்னொரு மகள் அமெரிக்காவிலிருந்து வந்து மருத்துவமனையில் சேர்த்தார். அப்போது தோள்பட்டையில் முறிவு இருப்பதும் கழுத்து நரம்பு சேதம் அடைந்திருப்பதும் தெரியவந்தது.

இவ்வாறு தெரிவித்து இருக்கிறார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், '' கொரோனா காரணமாக தற்போது வீட்டை விட்டு அவர்களை வெளியேறுமாறு இப்போது உத்தரவிடவில்லை. ஆனால் இனியும் கொடுமை தொடர்ந்தால் அவர்கள் யாராக இருந்தாலும் வீட்டை விட்டு வெளியில் அனுப்பப்படுவார்கள்,'' என தீர்ப்பு வழங்கி உள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்